|
New Page 1
போலே, இவையும் இயலைவிட்டு
இசையையே பாடுகின்றனவாதலின் ‘இசை பாடும்’ என்கிறது. சுழலின் மலி சக்கரப் பெருமானது
- பகைவர்களை அழிக்க வேண்டும் என்னும் விரைவாலே மிகவும் சுழன்று வாரா நின்றுள்ள திருவாழியையுடைய
சர்வேச்வரன். அன்றிக்கே, சுழலின் மலி சக்கரம் என்பதற்கு, சுழல்வது போலத் துளங்கா நின்றுள்ள
சக்கரம் என்னுதல். தொல் அருள் - இயல்பாகவே அமைந்த அருள். அருளாலே, கழல்வளை பூரிப்ப நாம்
கண்டு கைதொழக் கூடவற்றே என்க.
(9)
540
தொல்லருள் நல்வினை
யால்சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும்
விண்ணும் தொழநின்ற திருநகரம்
நல்லருள் ஆயி ரவர்நல
னேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம்பெரு
மான்நா ராயணன் நாமங்களே.
பொ-ரை :- தோழிமீர்காள்! எம்பெருமானுடைய தொல்
அருளை மண்ணுலகும் விண்ணுலகமும் அநுபவித்துத் தொழும்படி நின்ற திருநகரம், எம்பெருமானுடைய கல்யாண
குணங்களைக் கொண்டாடிப் பேசுகின்ற நல்ல அருளையுடைய ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கியிருக்கின்ற
திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற நல்லருளையுடைய நம்பெருமான் நாராயணனுடைய
திருநாமங்களை, எம்பெருமானுடைய தொல்லருளால் உண்டான புண்ணியத்தாலே சொல்லுவதற்குக் கூடுமோ?
என்கிறாள்.
வி-கு :-
தொல் அருள் - இயல்பாகவே உள்ள அருள். தொல் அருளைத் தொழ நின்ற திருநகரமாகிய திருவல்லவாழ்
என்க. நலனேந்தும் நல் அருள் ஆயிரவர் தங்கியிருக்கின்ற திருவல்லவாழ் என்க. நாராயணனுடைய நாமங்களை
நல்வினையால் சொலக் கூடுங்கொல்? என்க. தொல்லருளால் உண்டாய நல்வினை என்க.
ஈடு :- பத்தாம்
பாட்டு. 1இயல்பாகவே அமைந்துள்ள அவனுடைய கிருபையாலே அவனைக் காணப்பெற்று, பிரீதி
_____________________________________________________
1.
“தொல்லருள் நல்வினையால் நாராயணன் நாமங்கள் சொலக் கூடுங்கொல்”
என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|