| உ 
உரைத்த. 1ஆயிரம் திருப்பெயர்களைச் 
சொன்னால் அவன் குணங்கள் தோற்றுமாறு போலேயன்றோ, இவற்றாலும் அவன் குணங்களும் செயல்களும் 
தோற்றும்படி. தென் நகர் - அழகிய நகரி. சிறந்தார் பிறந்தே - 2ஒருவனுக்குப் பிறக்கை 
போக்கித் தாழ்ச்சி இன்றிக்கே இருக்க, அவனுக்குப் பல பிறப்பாய் ஒளி வருமாறு போலே, இவர்களும் 
இங்கே பகவானுடைய குணங்களை அநுபவம் பண்ணுகையாலே சீரியர்கள். 3“சீதனையே தொழுவார் 
விண்ணுளாரிலும் சீரியர்” என்னக்கடவதன்றோ. 4இந்தப்பத்தினைக் கற்க வல்லவர்கள்; 
என்னைப் போலே அவன் இருந்த தேசத்திலே போகப் புக்கு, பலக் குறைவின் காரணமாக நடுவழியிலே 
விழுந்து நோவு படாதே உகந்தருளின தேசத்திலே புக்கு அநுபவிக்கப் பெறுவர்கள். 5இவர்களுடைய 
ஜன்மங்கள் கர்மங்காரணமாக இருக்கச் செய்தே அவனுக்கு உறுப்பாகை 
_____________________________________________________ 
1. ‘ஆயிரம் பாசுரங்களில் இவை பத்து’ என்னாமல், 
“நாமங்களாயிரத்துள்இவை பத்தும்” என்பான் என்? என்ன, “நாமங்களாயிரமுடைய”
 என்றதனைத் திருவுளத்தே 
கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
 ‘ஆயிரம் திருப்பெயர்களை’ என்று தொடங்கி. தோற்றும்படி 
ஆகையாலே
 திருநாமங்களான ஆயிரம் என்னக் குறை இல்லை என்பது எஞ்சி நிற்கிறது.
 
 2. பிறந்தே சிறந்தார் என்று கூட்டுக. பிறவியினையுடையராயிருந்தும்
 சிலாக்கியராயிருப்பார். பிறவியில் சிலாக்யதை கூடாது என்னுமதனையும்;
 இத்தகைய பிறவியினையுடையராயிருந்தும், 
சர்வேச்வரனுக்குப் பிறக்கப்
 பிறக்கக் குணங்கள் புகர் பெற்று வருமாறு போன்று, இவர்களும்
 பகவதநுபவம் பண்ணுகையாலே சிலாக்கியராயிருப்பார்கள்
 என்னுமதனையும் அருளிச்செய்கிறார் 
‘ஒருவனுக்கு’ என்று தொடங்கி.
 ஒருவனுக்கு - சம்சாரி சேதனனுக்கு. பிறக்கை போக்கி-பிறக்கையைப் 
பற்ற;
 என்றது, பிறவியைக்காட்டிலும், வேறு ஒன்று தாழ்ச்சியின்றிக்கே
 இருக்கையைத் தெரிவித்தபடி.
 
 3. ‘இங்கே பகவதநுபவம் பண்ணுகையாலே அவர்கள் 
சீரியர்’ என்றதற்குப்
 பிரமாணம் காட்டுகிறார் ‘சீதனையே’ என்று. இது திருவிருத்தம். 79.
 
 4. இத்திருவாய்மொழியின் அர்த்தாநுகுணமாகப் 
பலம் அருளிச்செய்கிறார்
 ‘இந்தப் பத்தினை’ என்று தொடங்கி.
 
 5. பகவானுடைய 
அவதாரத்திற்கு இச்சை காரணமாகையாலே, அவனுக்கு ஒளி
 வரக்கூடும், கர்மங்காரணமாகப் பிறக்கின்ற 
இவர்கள் சிலாக்கியராகக்
 கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்களுடைய’
 என்று 
தொடங்கி.
 |