| 1அவர 
1அவர்களுக்குத் 
தங்கள் தலையிலேயும் சில கிடக்கையாலே விளம்பம் பொறுக்கலாம், இவர்களுக்கு அங்ஙன் சொல்லலாவது 
ஒன்று இல்லையாகையாலே கிடந்து அலமாப்பார்கள். 2‘அவன் அடியாலே நம் பேறு’
என்றிருக்குமவர்களுக்கு ஒரு கண்ணழிவு இல்லையே சொல்லலாவது. 3“இரகு வம்சத்தில் 
அவதரித்தவரே! உம்மை நீங்கினால் சீதா பிராட்டி உயிர் வாழாதது போன்று, நானும் உயிர் வாழ 
மாட்டேன்” என்கிறபடியே, லாபாலாபங்களில் பிராட்டியையும் தம்மையும் ஒரு தன்மையராகச் 
சொன்னாரன்றோ இளையபெருமாள். 4“சுவாமியே! சிறந்த பிரீதியானது எப்பொழுதும் தேவரீரிடத்திலேயே 
நிலைத்து விட்டது, பக்தியும் நியதமாக இருக்கிறது, என் எண்ணமும் வேறிடத்தில் எனக்குச் செல்வது 
இல்லை” என்று, திருவடி ஸ்ரீராமாவதாரம் ஒன்றிலும் சக்தனாயிருக்குமாறு போன்று, இவர் எல்லா அவதாரங்களிலும் 
____________________________________________________ 
1. ‘தங்கள் முயற்சியாலே 
பேறு’ என்றிருத்தல் இருடிகளுடைய பிரதிபத்திசரீரமாகையாலே, ‘நாம் செய்யும் முயற்சி முடிந்து கிரமத்திலே 
பலிக்க
 வேண்டாவோ’ என்று அவர்களுக்கு விரஹம் பொறுக்கலாயிருக்கும்
 என்றும், ஆழ்வார்களுக்கு 
அவர்களைப் போன்று தங்கள் தலைகளிலேயும்
 சில உண்டாய், அது பக்குவமடைந்த பின்னர்ப் பெற வேண்டும்
 என்னுமதில்லாமையாலே விரஹம் பொறுக்க மாட்டார்கள் என்றும்
 அருளிச்செய்கிறார் ‘அவர்களுக்கு’ 
என்று தொடங்கி.
 
 2. இவர்களுக்கு முயற்சியினாலே 
பலிக்க வேண்டுவது ஒன்று இன்றிக்கே
 இருப்பான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் 
‘அவன்
 அடியாலே’ என்று தொடங்கி.
 
 3. நன்று; ‘அசோக வனத்தில் 
பிரட்டியைப் போன்று’ என்று பிராட்டியோடு
 ஒப்புச்சொல்லாமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் 
‘இரகு
 வம்சத்தில்’ என்று தொடங்கி.
 
 “நச ஸீதா த்வயா ஹீநா நச 
அஹமபி ராகவ
 முஹூர்த்தமபி ஜீவாவ: ஜலாந்மத்ஸ்யாவிவ 
உத்ருதௌ:
 
 என்பது, ஸ்ரீராமா. அயோத், 53 : 
31.
 
 4. இத்திருவாய்மொழியில் 
கிருஷ்ணாவதாரம் சொல்லாநிற்க, மற்றை
 அவதாரங்களையும் சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘சுவாமியே!’ என்று தொடங்கி.
 
 “ஸ்நேஹோ மே பரமோ ராஜந் 
த்வயி நித்யம் ப்ரதிஷ்டித:
 பக்திஸ்ச நியதா வீர 
பாவோ நாந்யத்ர கச்சதி”
 
 என்பது, ஸ்ரீராமா. உத். 40 
: 16.
 |