| த 
திதியில்” என்கிறபடியே, பன்னிரண்டு மாதங்கள் கர்ப்பத்திலே 
தங்கியிருக்கையாலும், அவளுக்கு முலை சுரக்கையாலும், முலை பெறாவிடில் இவன் தான் நோவுபடுகையாலும், 
தன்னைக் கட்டவும் அடிக்கவுமாம்படி எளியனாக்கி வைக்கையாலும் பிறந்தவாறும் என்கிறார். 
1பகல் கண்ட குழியிலே இரவிலே விழுவாரைப் போன்று, பருவம் முற்றினவளவிலே “எத்திறம்”
என்று மோஹித்து விழக்கடவ இவர், அதற்கும் அவ்வருகே சென்று இழிகிறாரன்றோ, கலக்கம் 
இருக்கிறபடி. ‘எத்திறம்’ என்று அங்கே ஆறு மாதங்களும், ‘பிறந்தவாறும்’ என்று இங்கே ஆறு மாதங்களும் 
மோஹித்துக் கிடந்தார் என்று பிரசித்தமன்றோ! 2ஸ்ரீபரதாழ்வான் ஸ்ரீராமபிரானுடைய 
பிரிவாலே மோஹித்துத் தறைப்பட்டுக் கிடக்க, தாய்மார் அடங்கலும் சுற்றும் பார்த்து நிற்க, 
“சத்ருக்நாழ்வான் செயலற்று நின்றான்” என்கிறபடியே, ஸ்ரீ சத்துருக்நாழ்வான் கிட்டவுங்கூடப் பயப்பட்டுச் 
செயலற்றவனாய் நின்றானன்றோ. 3அப்படியே, நல்லார் நவில் குருகூரன்றோ, உலகத்தில் 
அறிவுடையாரங்கடலும் திரண்டு இவர் படிகளைக்கண்டு அறிவு கெடும்படி அன்றோ இவர் கலங்கிக் கிடந்த 
கிடை.
 வளர்ந்தவாறும் - 4வளர்ந்தபடியை 
அநுசந்தித்தால் பிறந்தவாற்றிலே கால்வாங்கி இளைப்பாற வேண்டும்படி
 
____________________________________________________ 
1. வளர்ந்தவாற்றிலே “எத்திறம்” 
என்று மோஹித்த இவர், அதற்குஅவ்வருகான பிறந்தவாற்றிலே போவான் என்? என்ன, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார் ‘பகல் கண்ட’ என்று தொடங்கி. இப்படிச்
 சொல்லுகைக்கு இரண்டு இடங்களிலும் 
மோஹித்தாரோ? என்ன, அதற்கு
 விடை அருளிச்செய்கிறார் ‘எத்திறம்’ என்று தொடங்கி.
 
 2. மோஹித்துக் கிடந்த தசையில் இவரை நோக்கினார் 
இன்னார் என்பதனைத்
 திருஷ்டாந்தத்தோடு அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி.
 
 “ததவஸ்தம் து பரதம் ஸத்ருக்ந: அநந்தரஸ்தித:”
 
 என்பது, ஸ்ரீராமா. அயோத். 87 : 4.
 
 3. ‘அப்படியே’ என்றதனை, ‘உலகத்தில் அறிவுடையார்’ 
என்று பின்னே
 வருகின்ற வாக்கியத்தோடு கூட்டுக. “நல்லார் நவில்” என்பது, திருவிருத்தம்.
 
 4. வளர்ந்தவாறு 
இருக்கும்படி பிறந்தவாற்றிலும் அதிகம் என்கிறார்
 ‘வளர்ந்தபடியை’ என்று தொடங்கி. வளர்ந்தபடியை 
நினைத்து
 |