|
என
என்கிறார். 1அன்றிக்கே,
சேருகையாவது இரண்டு தலையும் சேருகையாய், நான் அநுசந்தித்து நைகின்றவனாதல் தவிர்ந்து உன்னைப்
பிரியாதபடி கிட்டப்பெறுவது என்று? என்கிறாராகவுமாம்.
(1)
543
வதுவை வார்த்தையுள்
ஏறுபாய்ந்ததும் மாயமாவினை வாய்பிளந்தும்
மதுவை வார்குழலார் குரவை
பிணைந்தகுழகும்
அதுஇதுஉது என்ன லாவன
அல்ல என்னைஉன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா!
உனைஎன்று தலைப்பெய்வனே?
பொ-ரை :-
கல்யாண வார்த்தைகள் பிறந்த அளவிலே இடபங்களின்மேல்
வீழ்ந்து அவற்றைக் கொன்றதும், வஞ்சனை பொருந்திய கேசி என்பவனுடைய வாயினைப் பிளந்ததும்,
தேன் சிந்துகிற கூந்தலையுடைய பெண்களோடு குரவைக் கூத்தினைக் கோத்து ஆடிய குழகும், அது இது உது
என்னலாவன அல்ல; உன் செய்கைகள் என்னை நைவிக்கும்; பழமையான உலகங்கட்கெல்லாம் முதல்வனே!
உன்னை என்று வந்து சேர்வேன்?
வி-கு :-
வதுவை-திருமணம். மாவினை என்பதில், இன்: சாரியை; ஐ: இரண்டனுருபு. மா-குதிரை. மதுவை என்பதில்,
ஐ: இடைச்சொல். குரவை-ஒருகூத்து விசேடம். குழகு-சாமர்த்தியம்.
ஈடு :-
இரண்டாம் பாட்டு. 2ஏறு அடர்க்கை தொடக்கமான உன் செயல்கள் என்னை நைவிக்கின்றன;
நான் தரித்து நின்று அநுபவிக்கும்படி செய்ய வேண்டும் என்கிறார். 3இனி அல்லாத
அவதாரங்களையும் ஆராய்ந்தால் இத்தன்மையனவாய் இருக்குமன்றோ, ஆகையாலே அவ்வருகு போக மாட்டார்,
அடியில் இழிய மாட்டார், இனி
____________________________________________________
1. மேல் மானசமாகச்
சேருகையை அருளிச்செய்து, எம்பார் நிர்வாகத்திலே,
சரீரத்தால் சேருகையை அருளிச்செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
2. “ஏறு பாய்ந்ததும்” என்றது
முதலாகக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
3. பிறந்தவாற்றிலேயாதல்
மற்றை அவதாரங்களிலேயாதல் போகாமல்,
வளர்ந்தவாற்றிலே போவான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இனி’ என்று தொடங்கி. ‘இத்தன்மையனவாயிருக்கும்’
என்றது, இந்த ஸ்வபாவத்தையுடையனவா
|