முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
442

அவனுக

அவனுக்கு. 1கருமாரி பாய்ந்தால் ஆகாதோ என்னும்படி அன்றோ அவளுடைய இன்பம். மாய மாவினை வாய் பிளந்தும்-2கம்சனாலே தூண்டப்பெற்றதாய் வஞ்சனை பொருந்திய வேடம் கொண்டு வந்ததாயிற்று. வஞ்சனையாகக் குதிரை வடிவங்கொண்டு வாயினை அங்காந்து கொண்டு ஓர் அசுரன் வந்து தோன்ற, சிறு பிள்ளைகள் துவாரங்கண்ட இடத்தில் கை நீட்டும் வாசனையாலே அதன் வாயிலே கையை நீட்டினான். முன்பு கண்டறியாதது ஒன்றைக் கண்ட காட்சியாலே கை விம்மிற்று, பூரித்தவாறே இரண்டு கூறாய் விழுந்தான். 3ஸ்ரீநாரத பகவான் “உலகம் அழிந்தது” என்று வந்து விழுந்தாற்போலே இவர்க்கு இப்போது இருக்கிறது. 4“நன்கு திறந்த வாயையுடையவனும் மஹா பயங்கரமானவனுமான அந்த அசுரன் இடியினாலே பிளக்கப்பட்ட மரம் போலே கிருஷ்ணனுடைய திருக்கையாலே இரண்டு கூறு செய்யப்பட்டவனாய்க் கீழே விழுந்தான்” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம். 5இத்தால், ஸ்ரீ பிருந்தாவனத்துக்கு வழி

____________________________________________________

1. சுகரூபமாகத் தோன்றுகைக்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘கருமாரி’ என்று தொடங்கி. கருமாரி பாய்கையாவது,
  காமாக்ஷியினுடைய ஆலயத்திலேயுள்ள குளத்திலே நட்டுள்ள இரண்டு
  இரும்புக்கம்பிகளின் நடுவில் விழுதல்.

2. அசுரன் குதிரையாய் வருவதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
  ‘கம்சனாலே’ என்று தொடங்கி. வருத்தம் சிறிதும் இன்றி அழித்தமையை
  அருளிச்செய்கிறார் ‘வஞ்சனையாக’ என்று தொடங்கி.

3. அவன் இறந்து போகவும் “மாய மா” என்கிறது என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ நாரத பகவான்’ என்று தொடங்கி.

4. அப்படிக் கொடுமையாக வந்தானோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘நன்கு’ என்று தொடங்கி.

  “வ்யாதிதாஸ்ய: மஹாரௌத்ர: ஸ: அஸுர: கிருஷ்ணபாஹுநா
   நிபபாத த்விதாபூத: வைத்யுதேந யதா த்ரும:”

  என்பது ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 16 : 7.

5. மேலே நப்பின்னைக்கு உதவியபடி சொல்லிற்று; இங்குப் பெண்களுக்கு
  உதவினபடி சொல்லுகிறது என்கிறார் ‘இத்தால்’ என்று தொடங்கி.
  இசங்கும்படி-நடக்கும்படி.