முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
443

இசங

இசங்கும்படி பெண்களுக்கு வன்னியம் அறுத்துக் கொடுத்தபடி.

    மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்-தேன் பெருக்கு எடுக்கின்ற கூந்தலையுடைய பெண்களோடு 1குரவையின் கோப்பிலே தன்னையும் ஒருவனாக்கித் தொடுத்தபடி. 2அவர்கள் நினைவினைக் குலைத்து அபிமானம் நீங்கினவர்களாகச் செய்து, அவர்களோடு ஒக்கத் தான் கலந்தான். 3அதாவது, வேற்றாள் என்ன ஒண்ணாதபடி இவர்களிலே ஒருவன் என்னலாம்படி புக்கு நின்றானாயிற்று என்றபடி. மதுவை வார்குழலார் என்றது, 4மதுவார்குழலார் என்றபடி. சொற்பாடு. அது இது உது என்னலாவன அல்ல - அதுவாகவுமாம், இதுவாகவுமாம், உதுவாகவுமாம், எனக்கு இதில் ஒரு நிர்ப்பந்தம் இல்லை. என்னை உன்செய்கை நைவிக்கும் - 5அச்செயலாகவுமாம், இச்செயலாகவுமாம், உச்செயலாகவுமாம், அவற்றில் எனக்கு ஒரு தாத்பர்யம் இல்லை; உன்னுடைய செயல்களாகையும், நானாகையுமே எனக்கு நோவு படுகைக்கு வேண்டுவது. 6“இத்தால் சொல்லிற்றாயிற்று, இப்

_____________________________________________________

1. மேன்மை தோற்றாதபடி ஒரே இனத்தானாய்க் கலந்தான் என்கிறார்
  ‘குரவையின் கோப்பிலே’ என்று தொடங்கி.

2. அன்றிக்கே, விடர்களின் செயலாலே பெண்கள் நெஞ்சில் மறத்தைப்
  போக்கி வசீகரித்துக் கலந்தான் என்று வேறும் ஒரு கருத்து
  அருளிச்செய்கிறார் ‘அவர்கள் நினைவினை’ என்று தொடங்கி.

3. மேலே கூறிய பொருளை விவரணம் செய்கிறார் ‘அதாவது’ என்று
  தொடங்கி. ‘அதாவது’ என்றது, அவர்களோடு ஒக்கத் தான் கலத்தலாவது
  என்றபடி.

4. ‘மதுவார்குழலார் என்றபடி’ என்றது, “மதுவை” என்பதில் “ஐ” சாரியை
  இடைச்சொல் என்பதனைத் தெரிவித்தபடி. ‘சொற்பாடு’ என்றது,
  சொல்படுதல்: அதாவது, இசை நிறைக்க வந்தது என்றபடி. “என்னலாவன
  அல்ல” என்றது, அது இது உது என்று விசேடித்துச் சொல்லலாவன அல்ல
  என்றபடி.

5. ‘அதுவாகவுமாம்’ என்று தொடங்கி. மேலே அருளிச்செய்ததை விவரணம்
  செய்கிறார் ‘அச்செயலாகவுமாம்’ என்று தொடங்கி.

6. “அது இது உது” என்பதற்கு, வேறும் ஒரு நிர்வாஹத்தை அருளிச்செய்கிறார்
  ‘இத்தால்’ என்று தொடங்கி. ‘மத்தியஸ்த ரக்ஷணமும்’ என்றது,
  நப்பின்னையைப் போன்று அந்தரங்கைகளுமன்றிக்கே,