முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
444

பாசுரத்தில் மூன்று பொருள்கள் சொல்லப்படுகின்றன. அவை யாவன: அனுகூல சம்ஸ்லேஷமும், பிரதிகூல நிரசனமும், மத்தியஸ்த ரக்ஷணமும்; இவற்றையே, ‘அது இது உது’ என்கிறது” என்று பிள்ளான் பணிக்கும். முதுவையம் முதல்வா - பழையதான பூமிக்குக் காரணமானவனே! என்னுதல்; பூமிக்குப் பழைய காரணமானவனே! என்னுதல். 1இவர் தம்மதும் அவ்வளவாகாதேதான். பிரளயம் கொண்ட உலகம் போலே யாகாதே இவரும் அழிந்தபடி. இத்தோடு ஒக்க இவரையும் அடிதொட்டும் உண்டாக்க வேண்டி இருக்கிறபடி. உன்னை என்று தலைப்பெய்வனே - உன்னை நினைத்து நிலைகுலைந்தவனாகாதே தரித்து நின்று அநுசந்திக்கும்படி செய்ய வேண்டும். அன்றிக்கே, உன்னை வந்து கிட்டப்பெறுவது என்றோ என்றுமாம். தலைப்பெய்கை-கிட்டுகை.

(2)

544

    பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்டபிள்ளைத் தேற்றமும்
                                    பேர்ந்தொர் சாடிறச்
    செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்
    நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள நீயுன்
                             தாமரைக் கண்கள் நீர்மல்கப்
    பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.


    பொ-ரை :-
பூக்கள் வைத்த கூந்தலையுடைய பூதனையினது பாலை உண்ட பிள்ளைத்தனத்திலே தெளிவும், வஞ்சனையினால் ஒப்பற்றவனான சகடாசுரன் இடம் விட்டுப் பெயர்ந்து சென்று அழியும்படி சிவந்த ஒரு திருவடியினால் உதைத்துத் தள்ளிய நின் சிறிய வீரமும், நெய்யை உண்ட வார்த்தை பிறந்தவளவிலே தாயானவள் கோலினைக் கையிலே

__________________________________________________

  கேசியைப் போன்று விரோதிகளுமன்றிக்கே இருக்கின்ற மதுவார்
  குழலார்களுடைய ரக்ஷணத்தை என்றபடி.

1. “என்னை உன்செய்கை நைவிக்கும்” என்றதன்பின் “முதுவைய முதல்வா”
  என்று காரணத்வம் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவர்
  தம்மதும்’ என்று தொடங்கி. அடிதொட்டும் - அடி தொடங்கி; சத்தையே
  தொடங்கி என்றபடி.

 
    இத்திருவாய்மொழியில், கிட்டுகைக்கு வாசகங்களான சொற்களெல்லாம்,
  ஆழ்வான் நிர்வாஹத்திலே மானசாநுசந்தானபரங்கள் என்றும், எம்பார்
  நிர்வாஹத்திலே சரீரத்தாலே கிட்டுதல் என்றும் கொள்க.