முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
448

New Page 1

தலையை எப்போது அலங்காரம் செய்யப்போகின்றன” என்பது ஸ்தோத்திர ரத்நம். அப்போதும் அவுணன் உள்ளத்து எண்மதியும் கடந்து அண்டமீது போயிற்றதும் கடுகித் திருவடிகள் அன்றோ.

    நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரைக்கண்கள் நீர் மல்க பையவே நிலையும் - பருவம் நிரம்புவதற்கு முன்பு, தான் பிரதிகூலரை அஞ்சப்பண்ணுமாறு போலே காணும் பருவம் நிரம்ப நிரம்ப அநுகூலர்க்குத் தான் அஞ்சும்படியும். நெய் உண் வார்த்தையுள்-நெய்யைக் குறியிட்டுக் கடக்க வைத்துப் போய்ப் பின்னர் வந்து பார்த்தாள், குறி அழிந்து கிடக்கையாலே ‘நெய் களவு போயிற்று’ என்றாள்; அவ்வளவிலே 1பையாக்க விழிக்கத் தொடங்கினான். அன்னை கோல் கொள்ள - 2மாதா அன்றோ எடுத்தாள்’ என்னும் வேறுபாடு அறிகின்றிலன். அவள் வார்த்தை அன்றோ ‘உந்தம் அடிகள் முனிவர் - வாரீர் பிள்ளாய், உங்கள் தமப்பனார் கேட்பராகில் உம்மைப் பொடிவர். உன்னை நான் என் கையிற்கோலால் நொந்திட மோதவும் கில்லேன்’ இதுதான் இருக்கிறபடி கண்டீரே; இதனைக் கொண்டு இனி, நீர் ஒன்றும் செய்யாதபடி பண்ணிக் கொள்ளலாமன்றோ வல்லார்க்கு, நான் அதற்குச் சக்தை ஆகின்றிலேன். 3தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து

___________________________________________________

1. பையாக்க-பயம் தோன்ற.

2. அன்னை கோல்கொண்டபின் இவள் கண்ணநீர் விழவிட்டது மயக்கத்தின்
  காரியம் என்கிறார் ‘மாதா அன்றோ’ என்று தொடங்கி. ஆயின், அவள்
  அடியாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவள் வார்த்தை’
  என்று தொடங்கி. “உந்தம் அடிகள்” என்ற பாசுரத்திற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘வாரீர்’ என்று தொடங்கி.

  உந்த மடிகள் முனிவர் உன்னை நான் என்கையில் கோலால்
  நொந்திட மோதவுங் கில்லேன் நுங்கள்தம் ஆநிரை எல்லாம்
  வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண
  அந்தியம் போதுஅங்கு நில்லேல் ஆழியங் கையனே வாராய்.

  என்பது, பெரிய திருமொழி, 10. 5 : 8.

3. தாய் எடுத்த கோலுக்கு இவன் பயப்பட்டதற்கு பிரமாணம் காட்டுகிறார்
  ‘தாய் எடுத்த’ என்று தொடங்கி.

  “தாயெடுத்த சிறுகோலுக்கு உளைந்தோடித் தயிருண்ட
   வாய்துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்என் வரிவளையே”


  என்பது, பெரிய திருமொழி, 8. 3 : 5.