முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
450

ஒண

ஒண்ணாதபடி புக்க இடம் புக்கு வடிம்பிட்டு நலியாநின்றன. பையவே வந்து என்நெஞ்சை உருக்கும் - என்னை ஓர் அடி போக ஒட்டாதே காற்கட்டாநின்றன என்கிறார். நெஞ்சை உருக்கும்-இவர் நெஞ்சிலே அடியிட்டபடி. உருக்கும்-முதல் நெஞ்சினை உருக்க அடியிட்டது.

(3)

545

    கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப்புரம் புக்க வாறும்
                                    கலந்த சுரரை
    உள்ளம் பேதம்செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
    வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேற லாமை
                                விளங்க நின்றதும்
    உள்ள முள்குடைந்துஎன் உயிரைஉருக்கி உண்ணுமே.

   
பொ-ரை :- வஞ்சனை பொருந்திய வேடத்தைக்கொண்டு சென்று திரிபுரத்திலே புகுந்த விதமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர்களுடைய மனங்களை வேறுபடுத்தி உயிர்களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையையுடைய சிவபிரானும் உன் பக்கல் வேறு அல்லாதபடி விளங்க நின்றதும், என் மனத்திற்குள்ளே புக்கு என் உயிரை உருக்கி முடிக்கின்றன.

    வி-கு :-
கள்ள வேடம் - புத்த வேடம். அசுரர் - திரிபுரவாசிகள். உள்-ஞானம். புக்கவாறும் உபாயங்களும் விளங்க நின்றதும் உள் குடைந்து உயிரை உருக்கி உண்ணும் என்க.

    ஈடு :-
நான்காம் பாட்டு. பௌத்தாவதாரச்செயல் மிகவும் என்னை நலியா நின்றது என்கிறார். 1அநுகூலர் விஷயத்தில் களவு சொல்லிற்று மேற்பாசுரத்தில்; பிரதி கூலர் விஷயத்தில் களவு கண்டபடி சொல்லுகிறது இப்பாசுரத்தில்.

____________________________________________________

1. “கள்ள வேடத்தை” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். தர்மத்தைக் கெடுக்க எடுத்த பௌத்த அவதாரச்
  செயல் மனமுருகுவதற்குக் காரணமாமோ? என்ன, மேற்பாசுரத்தில் கூறிய
  களவு அடியார்கள் விஷயத்தில் செய்ததாகையாலே குணமாய் மனம்
  உருகுவதற்குக் காரணம் ஆயினாற்போன்று, இப்பாசுரத்தில் சொன்ன
  களவும் அடியார்களுடைய விரோதிகளை அழிப்பதற்குக் காரணமாகையாலே
  குணமாய் மனம் உருகுவதற்குக் காரணமாகக்கூடும் என்று திருவுள்ளம்பற்றி,
  மேற்பாசுரத்தோடே இப்பாசுரத்திற்கு இயைபு அருளிச்செய்கிறார் ‘அநுகூலர்
  விஷயத்தில்’ என்று தொடங்கி.