|
ப
பாரீர்; 1“அளவிட
முடியாத பராக்கிரமத்தையுடையவனும் பூஜ்யனுமாயிருக்கிற சிவனுக்கு, சர்வ வியாபியான விஷ்ணுவானவர்
அந்தர்யாமியாக இருக்கிறார்; அப்படி இருப்பதனாலே, அந்தச் சிவன், திரிபுரங்களை அழிக்குங்காலத்தில்
வில்லை வளைத்து நாணை ஏற்றுதலாகிற அந்தக் காரியத்தை மிகவும் பொறுத்துக்கொண்டான்” என்கிறபடியேயன்றோ.
2சேதனனைக் கொண்டு காரியங் கொண்டதோடு, அசேதனத்தைக்கொண்டு காரியங் கொண்டதோடு
வாசி இல்லை இவனுக்கு. சிவன் தன்னோடு அவன் கையில் வில்லோடு வாசியில்லை இவனுக்கு. 3காரண
நிலையில் சித்து அசித்துக்களைக் கொண்டு காரியங்கொண்டதைப் போன்றதாயிற்று. 4முன்பு
அவன்தானே செய்வானாகக்கொண்டு எடுத்துப்பார்த்தான் அன்றோ; அது முடியாதொழிய, பின்னர் இவன்
உள்ளீடாய் நிற்கையாலன்றோ செய்து தலைக்
____________________________________________________
1. ‘சிவன் செய்தான்’ என்று
பிரமாணம் சொல்லாநிற்க, சர்வேச்வரன்
முப்புரங்களை அழித்தான் என்பது, என் கொண்டு? என்ன,
பிரமாணம்
கொண்டு என்கிறார் ‘அளவிட முடியாத’ என்று தொடங்கி.
“விஷ்ணுராத்மா பகவதோ
பவஸ்ய அமித தேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம்
ஸ விஷேஹே மஹேஸ்வர:
என்பது, பாரதம் கர்ண பர்வம்.
“மலைபோற் பொறுத்தாரும்
தாஅம், பணிவில்சீர்ச்
செல்விடைப் பாகன் திரிபுரம்
செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில்
நாணாகித்
தொல்புகழ் தந்தாரும் தாம்”
என்பது, பரிபாடல்.
2. சேதனனாகையாலே சிவனுக்கும்
இதில் சம்பந்தம் இல்லையோ? என்ன,
‘சேதனனைக்கொண்டு’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். அதனை விவரணம் செய்கிறார் ‘சிவன் தன்னோடு’
என்று தொடங்கி.
3. சித்து என்றும், அசித்து
என்றும் வேறுபாடில்லாமல், காரியங்கொள்ளக்
கண்டவிடம் உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘காரண
நிலையில்’ என்று தொடங்கி.
4. மேலே
காட்டிய சுலோகத்திலுள்ள “தஸ்மாத், ஸவிஷேஹே” என்ற
பதங்கட்குப் பொருள் அருளிச்செய்கிறார்
“முன்பு அவன்தானே” என்று
தொடங்கி. “தஸ்மாத்” என்றதன் அர்த்த சாமர்த்தியத்தாலே, முன்பு
எடுத்துப் பார்க்க, முடியாதொழிந்தது சித்தம்.
|