|
கட
கட்டவல்லனாயிற்று.
1பண்டு ஓர் அரசன் “சிவனே பரம்பொருள்” என்று எழுதி, ‘எழுத்திட்டுத்
தாருங்கோள்’ என்ன, அப்படிப் பலரும் எழுதி எழுத்திடா நிற்கச்செய்தே, ஒருவர்
வாராய், நீ இந்த ஓலை கெடாமே நோக்கி வைத்தால் அன்றோ இவனுடைய பரத்துவம் சாதிக்கலாவது;
நீ நினைக்கிற தேவதைக்கு உண்டாவ உயர்வுகள் ‘சர்வேச்வரனாலே’ என்று பிரமாணங்கள் சொல்லா நின்றன;
ஆனபின்னர், இன்று, நீ சொல்ல நான் எழுந்திட்டுப் போகிறேன்; நாளை ஒரு விவக்ஷிதன் தோன்றி
‘இவன் அறிவீனனாயிருந்தானே!’ என்னக் கேட்பதில் இன்று நீ நினைத்ததைச் செய்துகொள்ள மாட்டாயோ”
என்றார். உபாயங்களும் - 2அப்போது இருந்து சிந்தித்தவற்றையெல்லாம் நினைக்கிறது.
வெள்ளநீர்ச்
சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் - “பிரஹ்ம ருத்திரர்கள் நடுவே நின்றது
ஒரு 3முதல் களவு உண்டு, அதனைச் சொல்லுகிறது” என்று ஆளவந்தார் அருளிச்செய்ததாகத்
திருமாலையாண்டாள் பணிப்பர். என்றது, சிவனையும் தன்னையும் சமமாகச் சொல்லலாம்படி திரிமூர்த்தி
மத்திய
_____________________________________________________
1. ‘சர்வேச்வரன் அந்தராத்மாவாய்
நிற்கையாலே செய்தான்’ என்றதனால்
பலிதமான சிவனுடைய உயர்வு பகவானுக்கு அதீனப்பட்டது என்றதற்கு
ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘பண்டு ஓர் அரசன்’ என்று தொடங்கி. ‘ஒருவர்’
என்றது, கூரத்தாழ்வானை.
விவக்ஷிதன்-அறிவுடையவன். இங்கு
அவத்தப்புன் சமயச்சொற்
பொய்யை மெய்யென்று
அணிமிடறு புழுத்தான்தன்
னவையின் மேவிச்
சிவத்துக்கு மேற்பதக்குண்
டென்று தீட்டும்
திருக்கூர வேதியர்கோன்
செவ்வி பாடப்
பவத்துக்கம் பிணிநீங்க
நரகந் தூரப்
பரமபதம் குடிமலியப்
பள்ளி கொள்ளும்
நவத்துப்புச் செங்கனிவாய்க்
கரிய மேனி
நம்பெருமாள் அரங்கேசர்
ஆடி ரூசல்.
என்ற திருப்பாசுரம் நினைத்தல் தகும்.
2. “உபாயங்களும்” என்ற
பன்மைக்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘அப்போது’ என்று தொடங்கி.
3. ‘முதல்
களவு’ என்றது, “மத்யே விரிஞ்ச கிரிசம்” என்கிறபடியே
அவதரித்து, அவர்களோடே ஒருசேரக் கூறலாம்படி
திரிமூர்த்தி மத்திய
நிலைமையை.
|