|
உள
உள் குடைந்து - என் மனத்திலே
புக்கு மூழ்கி. என் உயிரை உருக்கி உண்ணும் - 1“சேதிக்க முடியாதது, எரிக்க முடியாதது”
என்கிற ஆத்மாவைப் புக்கு அழித்து நோவுபடுத்தாநின்றன. ஞானத்திற்கு வழியாக இருக்கின்ற மனத்திலே
புகுந்து ஆத்மாவை நீராக்கி முடியா நின்றன.
(4)
546
உண்ண வானவர் கோனுக்கு
ஆயர் ஒருப்படுத்த அடிசில்உண்டதும்
வண்ண மால்வரையை
எடுத்துமழை காத்ததும்
மண்ணை முன்படைத் துண்டுமிழ்ந்து
கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறுமென்னெஞ்சு
எரிவாய்மெழு கொக்கும்நின்றே.
பொ-ரை :- தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் உண்ணுவதற்கு
ஆயர்கள் சித்தம் செய்த உணவினைப் புசித்ததும், பல நிறங்களையுடைய பெரிய கோவர்த்தன மலையை
எடுத்து மழையைக் காத்ததும், பூலோகத்தை முன்னே உண்டாக்கிப் பிரளய காலத்தில் புசித்து மீண்டு
உமிழ்ந்ததும், திரிவிக்கிரமனாய் அளந்ததும், வராகமாகி இடந்து சேர்ந்ததுமான ஆச்சரியம்
பொருந்திய செயல்களை நினைக்குந்தோறும் என் மனம் அவற்றிலே நிலைபெற்று நெருப்பில் அகப்பட்ட
மெழுகினைப் போன்று உருகாநிற்கும்.
வி-கு :-
வானவர்கோன் உண்ணற்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் என்க. வண்ணம்-வர்ணம். மணந்த-பூமிப்பிராட்டியோடுங்கூடிய:
நெஞ்சு நின்று எண்ணுந்தோறும் எரிவாய் மெழுகு ஒக்கும் என்க.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. 2அடியார்களுக்காகவும் பொதுமையில் எல்லார்க்குமாகவும் செய்த செயல்களை நினைக்குந்தோறும்
என் மனமானது மிகவும் அழியா நின்றது என்கிறார்.
வானவர்கோனுக்கு
உண்ண ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்-தான் பிறந்து வளருகிற ஊரிலே சிலர்
___________________________________________________
1. ஸ்ரீ கீதை. 2 : 24.
2.
“அடிசில் உண்டதும் மழை காத்ததும்” என்பன போன்றவைகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|