முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
46

New Page 1

மேல்-அவன் அழகிலே தோற்றிருப்பவர்கள் உள்ளது பரமபதத்திலே அன்றோ? என்ன, இங்கே என்று படி எடுத்துக் காட்டுகிறார். 1பகவானுடைய அநுபவத்திற்கு மேட்டுமடையான சம்சாரத்தில் மருபூமியில் தண்ணீர் போலே எங்கேனும் ஒருவர் இருவர் உண்டாமத்தனையன்றோ? என்ன, மலியப் புகுந்து- 2“அடியார்கள் குழாங்கள்” என்கிறபடியே, நெருங்கப் புகுந்து. இசை பாடி ஆடி உழிதரக் கண்டோம்-சந்தோஷத்தின் மிகுதியாலே பாடுவது, உடம்பு இருந்த இடத்திலே இராமல் ஆடுவதாய்க் கொண்டு, 3யமன் முதலானோர்கள் தலை மேலே அடியிட்டுச் சஞ்சரிக்கக் கண்டோம். உழிதருகை-பயம் இல்லாமல் எங்கும் சஞ்சரித்தல்.

    கடல் வண்ணன் என்று தொடங்கி, உழிதரக் கண்டோம், வல்லுயிர்ச் சாபம் போயிற்று, நலியும் நரகமும் நைந்த, நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை, கலியும் கெடும், கண்டு கொண்மின், பொலிக பொலிக பொலிக என்று கூட்டுக.

455

  கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
  தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
  வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
  பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.

   
பொ-ரை :- கண்டோம் கண்டோம் கண்டோம், கண்களுக்கு மகிழ்ச்சியைக் கெடுக்கக்கூடிய கூட்டங்களைக் கண்டோம்; தொண்டீர்!

____________________________________________________

1. “மலியப் புகுந்து” என்பதற்கு, அவதாரிகை, ‘பகவானுடைய’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

      மருபூமி-நீரும் நிழலும் அற்ற நிலம். “மலையும் மறிகடலும் வனமும்
  மருநிலமும்” என்பது, கம்பராமா. மூலபல. 158. “நீரும் நிழலும் இல்லா மரு
  நிலம் என்பார், ‘மண்’ என்றார்” என்பது, பரிமேலழகருரை. (குறள். 742)

3. திருவாய். 2. 3 : 10.

4. “காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
   நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே”

  என்பது, திருமாலை.