|
ஆபத
ஆபத்துக்கள் வர இவை நோவுபடாதபடி வயிற்றிலே வைத்து நோக்கி,
‘உள்ளே கிடந்து மறைந்து போக ஒண்ணாது’ என்று பார்த்து வெளிநாடு காணப் புறப்பட விட்டு, பின்பு
மஹாபலி போல்வார் கவர்ந்து கொள்ள எல்லை நடந்து மீட்டுக்கொடுத்து, பின்பு 1அவாந்தர
பிரளயங்கொண்ட பூமியை மஹாவராஹமாய் எடுத்துக்கொண்டு ஏறி, இவையெல்லாம் பிராட்டிப் படுக்கைப்
பற்றாகையாலே அவளுக்குப் பிரயமாகச் செய்து அவளோடே கலந்த
ஆச்சரியமான செயல்களை. மணத்தல்-கலத்தல்.
எண்ணுந்தோறும் என்
நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே 2அவனுடைய ரக்ஷணத்திலும் பரப்பு உண்டாகாதே
இவருடைய பாரிப்பு. 3எண்ண மாட்டார், எண்ணாதிருக்க மாட்டார்; ரக்ஷணத்திற்கு அவன்
சமைந்தாற்போலே காணும் அழிகைக்கு இவர் சமைந்தபடி. 4இதனை நினைத்தே நாட்டார்
உண்டு உடுத்துக் காலம் போக்கா நின்றார்களாதலின் ‘என் நெஞ்சு’ என்கிறார்.
நெருப்பின் அருகில் இருக்கும் மெழுகு போலே உருகா நின்றது என்பார் ‘எரிவாய் மெழுகு ஒக்கும்’
என்கிறார். அது ஒருகாலே உருகுதல் கரிதல் செய்யுமன்றோ, இது உருகினபடியே இராநின்றதாதலின்
‘நின்றே’ என்கிறார்.
(5)
_____________________________________________________
1. அவாந்தர பிரளயம்-இடையில்
வருகின்ற பிரளயம்.
2. எண்ணும்போது என்னாமல்,
“எண்ணுந்தோறும்” என்றதற்குப் பாவம்
அருளிச்செய்கிறார் ‘அவனுடைய’ என்று தொடங்கி. என்றது,
ரக்ஷணத்துக்கு
உறுப்பான காரியங்கள் பலவானாற்போன்று, அவற்றைப் பற்றி வருகின்ற
இவருடைய
பாரிப்பும் பல என்றபடி.
3. மேல் வாக்கியத்தை விவரணம்
செய்கிறார் ‘எண்ண மாட்டார்’ என்று
தொடங்கி. அன்றிக்கே, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
எனக்
கோடலுமாம். என்றது, ஈடுபாட்டால் வந்த நிலை வேறுபாட்டாலே
அநுசந்திக்க மாட்டார்,
அநுசந்தியாதபோது தரித்திருக்கமாட்டாமையாலே
எண்ணாதிருக்க மாட்டார் என்றபடி.
4. “என்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இதனை நினைத்தே’ என்று
தொடங்கி.
|