முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
461

547

547

நின்ற வாறு மிருந்தவாறும் கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாயநின் மாயங்கள்
நின்றுநின்று நினைகின்றேன் உனைஎங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!


   
பொ-ரை :- பிரளய காலத்தில் உலகத்தைப் புசித்த ஒண்சுடரே! நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைத்தற்கு அரியனவாய் இருக்கின்றன; ஒருபடித்தாகாத உருவத்தையுடையையாய் அநுபவித்தற்கு உருத்தெரியாதவனாயிருக்கின்ற உன்னுடைய செயல்களை நின்று நினைக்கின்றேனாகிய நான் உன்னை எப்படி நினைப்பேன்? பாவத்தைச் செய்த எனக்குச் சிறந்தது ஓர் உபாயத்தைச் சொல்லுவாய்.

    வி-கு :-
நிற்றல், இருத்தல், கிடத்தல் - திவ்விய தேசங்களில். மாயங்கள்-ஆச்சரியமான செயல்கள். நினைகின்றேன்: வினையாலணையும் பெயர். நன்கு ஒன்று உரையாய் என்க.

    ஈடு :-
ஆறாம் பாட்டு. 1உன்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் காண விடாய்ப்பட்ட நான் நினைக்கவும் முடியாதவனாக இருக்கிறேன்; பிரளய ஆபத்தில் உலகத்தைக் காத்தாற்போன்று, நினைக்க வல்லேனாம்படி பண்ணி என்னைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

    நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன நின் மாயங்கள் - 2இவர் இவ்விஷயத்தில் படுகிறபாடு எல்லாம் நமக்கு இதர விஷயங்களிலே அநுபவ சித்தமன்றோ. இவ்விஷயத்தில் இன்றிக்கே ஒழிகிறதித்தனை. 3போரப் பாட வல்லாராய் இருப்பார் ஒருத்தர்,

_____________________________________________________

1. திருப்பாசுர முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. ஒவ்வொரு நிலையிலும் இவர் படுவது போன்று, நமக்கு இவ்விஷயத்தில்
  ஈடுபாடு உண்டாகவில்லையே? என்ன, ‘இவர் இவ்விஷயத்தில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. இவர் ஈடுபடுவது அடியார் பொருட்டுச் செய்த செயல்களுக்கு
  ஆகையாலே, பிரசங்காத், அவன் அடியார்பொருட்டுச் செய்யும் செயலுக்கு
  ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘போரப்பாட வல்லாராய்’ என்று