முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
464

1

1“ஸ்ரீ ராமன் கடற்கரையில் கடலை நோக்கிக் கிழக்கு முகமாகக் கையைக் கூப்பிக்கொண்டு படுத்தார்” என்கிறபடியே, கடற்கரையிலே கிடந்த கிடையும். “ப்ரதிஸிஸ்யே-எதிர்நோக்கிப் படுத்தார்” என்கிறதன்றோ, ஒரு கடலோடே ஒருகடல் பொறாமைகொண்டு கிடந்தாற்போலே இருக்கையாலே; “கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி” என்றான் அன்றோ. என்றது, பின்பு விடக்கடவதாகத் தொடுத்த அம்பு முன்பு விடமாட்டாமை இல்லை அன்றோ; அப்படிப்பட்ட அம்பு இருக்க, தம் தோள்வலி கிடக்க, தரம் போராதார் முகங்காட்டாதே இருக்கப் பொறுத்துக் கிடந்த கிடையைச் சொல்லுகிறது. ‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ என்று திரளச்சொல்ல அமையுமாயிருக்க, ‘நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்கிறார் அன்றோ, தனித்தனியே 2உளுக்கினபடி. நின்றானாகில் ‘நிலையார நின்றான்’ என்பார்கள்; ‘நின்றவன், இருத்தல் சாய்தல் செய்யிற் செய்வது என்?’ என்று வயிறு பிடிக்க வேண்டும்படியன்றோ அது இருப்பது; இருந்தானாகில், 3“பிரான் இருந்தமை காட்டினீர்” என்னும்

____________________________________________________

1. “அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஸிஸ்யே மஹோததே:”
 
  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 1.

  தருண மங்கையை மீட்பதோர் நெறிதரு கென்னும்
  பொருள் நயந்துநன் னூல்நெறி யடுக்கிய புல்லில்
  கருணை யங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி
  வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி.

  என்பது, கம்பராமாயணம், வருணனை வழிவேண்டு படலம், 5.

      இச்செய்யுளின் 3-ஆம் அடியின் பொருளினை அருளிச்செய்கிறார்
  ‘பின்பு’ என்று தொடங்கி.

2. உளுக்கினபடி - ஈடுபடுத்தினபடி. தனித்தனியே உளுக்கினபடியைக்
  காட்டுகிறார் ‘நின்றானாகில்’ என்று தொடங்கி. ‘நிலையார’ என்பதற்கு
  இரண்டு பொருள் அருளிச்செய்கிறார் ‘நின்றவன்’ என்று தொடங்கி.
  என்றது, நின்றவன் இருந்தாற்செய்வது என்? என்றும், சாய்ந்தருளின்
  செய்வது என்? என்றும் ஆம்.

  “நிலையார நின்றான்தன் நீள்கழலே அடைநெஞ்சே”

  என்பது, பெரியதிருமொழி. 6. 9 : 8.

3. குழையும் வாண்முகத் தேழையைத் தொலைவில்லி மங்கலம் கொண்டுபுக்கு

  இழைகொள் சோதிச்செந் தாமரைக் கண்ணபிரான் இருந்தமை காட்டினீர்