|
அற
அறியேன்” என்னும்படி
இருந்தபடியும், 1“நின்றும் இருந்தும் கிடந்தும்” என்கிறபடியே, தம் திருவுள்ளத்திலே
கிடந்தபடியும் என்னுதல். அன்றிக்கே, 2திருவூரகத்திலே நின்றபடியும், திருப்பாடகத்திலே
இருந்தபடியும், திருவெஃகாவிலே கிடந்தபடியும் என்னுதல்.
‘நின்றவாறும்
இருந்தவாறும் கிடந்தவாறும்’ என்று 3‘ஆழ்வார் பாடாநிற்க, ‘இவையெல்லாம்
தொட்டிலிலே’ என்று அருளிச்செய்தார் எம்பெருமானார். தொட்டிற் பழுவைப் பிடித்துக்கொண்டு
நிற்கும்படியும், தரித்து நிற்க மாட்டாமை விழுந்திருக்கும்படியும், அது தான் பொறுக்க மாட்டாமை
சாய்ந்து கிடக்கும்படியும் சொல்லுகிறது. அன்றிக்கே, 4போரார் வேற்கண் மடவாள்
போந்தனையும் பொய்யுறங்கி, அவள் போனவாறே எழுந்திருந்து நின்றவாறும், அடி ஓசை பட்டவாறே வந்து
இருந்தபடியும், நிழல் ஆடினவாறே முன்கிடந்த தானத்தே ஓராதவன்போல் கிடந்தவாறும் என்றுமாம். நினைப்பரியன-அவை
ஒருகால் செய்து போகச்செய்தேயும் இவர்க்கு இன்றுங்கூட நினைக்கவும் அரிதாயிராநின்றன. 5“இமையோர்
தமக்கும் செவ்வே நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச்சொல்” என்றார் அன்றோ
முன்பே. ஒன்று
_____________________________________________________
1. “நின்றும்
இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
ஒன்றுமோ ஆற்றான்என்
நெஞ்சகலான்.”
என்பது, பெரிய திருவந். 35.
2. ஆடவர்கள் எவ்வாறு
அகன்றொழிவார் வெஃகாவும்
பாடகமும் ஊரகமும்
பஞ்சரமா - நீடியமால்
நின்றான் இருந்தான்
கிடந்தான் இதுவன்றோ
மன்றார் மதிற்கச்சி
மாண்பு.
என்னும் பழம்பாடல் இங்கு நினைவு
கூர்தல் தகும்.
3. ஆழ்வார்-திருவரங்கப்பெருமாள்
அரையர். பழுவை-தொட்டில் சட்டத்தை.
4. சிறிய திருமடல். கண்ணி.
31.
ஆக, “நின்றவாறும் இருந்தவாறும்
கிடந்தவாறும்” என்பதற்கு, ஏழு
வகையாகக் கருத்து அருளிச்செய்தபடி.
5. ‘நினைக்கவும்
அரிதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இமையோர் தமக்கும்’ என்று தொடங்கி. இது,
திருவித்தம். 98-ஆம் பாசுரம்.
|