|
கல
கலாவது ஒருவழியிட்டுத்
தர வல்லையே. 1‘தொண்டு எல்லாம் நின்னடியே தொழுது உய்யுமாகண்டு’ - 2அடியார்கள்
அனைவரும் - ஐஸ்வர்யார்த்திகள், ஆத்மபிராப்திகாமர், பகவத் பிராப்திகாமர் இவர்கள்
முழுவதும்சென்று கிட்டித் தங்கள் தங்கட்குரிய பிரயோஜனங்களைப் பெற்று மீளுகிறபடியைக் கண்டு,
‘தான் கணபுரம் தொழப்போயினாள்’-தானும் கலந்து பரிமாறி மீளலாம் என்று போனாள்;
‘தான்’-விஷயத்தையே பார்க்குமித்தனையோ, தந்தாமையும் பார்க்க வேண்டாவோ. 3ஒரு
பிரயோஜனத்துக்காகப் போவார்க்கன்றோ அது கொண்டு மீளலாவது, தன்னையே பிரயோஜனமாகப் பற்றிப்
போவார்க்கு மீள விரகு உண்டோ. இப்படியே அன்றோ பகவத் பிராவண்யமுடையார்படி.
பாவியேற்கு-என்னை
ஒழிந்தாரடங்கலும் நினைப்பாரும் நினைத்தவற்றைப் பெறுவாருமாய்க் கண்டீர் செல்லுகிறது! 4“நினைப்பவர்கட்கு
மங்களத்தைக் கொடுக்கிறார்” என்கிறபடியேயன்றோ நாடு அடங்கலும். ஒன்று நன்கு உரையாய்-5அருச்சுனனுக்குச்
சொன்னாற்போலே எனக்கும்
_____________________________________________________
1. உலகத்தார் அவனை நினைத்துக்
காரியம் கொள்ளாநிற்க, இவர்க்கு
நினைக்கைதான் தேட்டமாவான் என்? என்ன, ‘தொண்டு எல்லாம்’
என்று
தொடங்கி அதற்கு விடையருளிச்செய்கிறார்.
தொண்டெலாம் நின்னடி யேதொழி
துய்யுமா
கண்டுதான் கணபுரம் தொழப்
போயினாள்
வண்டுலாம் கோதைஎன் பேதை
மணிநிறம்
கொண்டுதான் கோயின்மை செய்வது
தக்கதே.
என்பது, பெரிய திருமொழி, 8. 2
: 8.
2. இத்திருப்பாசுரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘அடியார்கள்’ என்று
தொடங்கி. இதனால், வேறு பிரயோஜனங்களை
விரும்புகின்றவர்கள்
அந்தப் பிரயோஜனத்தின்பொருட்டு நினைக்கலாம், வேறு பிரயோஜனத்தை
நினைக்காதவர்கட்கு
ஈடுபாட்டுக்கு உடலாகையாலே நினைக்கப்போகாது
என்பதனைத் தெரிவித்தபடி.
3. மேலே கூறியதை விவரணம்
செய்கிறார் ‘ஒரு பிரயோஜனத்துக்காக’
என்று தொடங்கி.
4. ஆயாஸ: ஸ்மரணே
க: அஸ்ய ஸ்ம்ருதோ யச்சதி ஸோபநம்
பாபக்ஷய: ச பவதி ஸ்மரதாம்
தம் அஹர்நிஸம்
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 17 :
78. ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் கூறியது.
5.
‘அருச்சுனனுக்குச் சொன்னாற்போலே’ என்றது, அருச்சுனனுக்கு ‘மாசுச:-
துக்கப்படாதே’ என்று
சொன்னாற்போலே என்றபடி.
|