|
உண
உண்ட ஒண்சுடரே! 1உண்டி
உடல் காட்டுமே. 2நினைக்கை குற்றமாய்விட்டதோ. 3நினைவுங்கூடத் தேட்டமானால்
நீயே செய்து தலைக்கட்ட வேண்டாவோ. 4இவை, ஆபத்துங்கூட அறிவிக்க மாட்டாத சமயத்திலே
நீயே அறிந்து வயிற்றிலே வைத்து நோக்கி, இந்த உபகாரத்தை இவை அறியாதொழிய ‘இது உன்பேறு’
என்னுமிடம் வடிவில் புகரிலே தோற்ற இருப்பான் ஒருவன் அல்லையோ. ‘உன்பேறாக ரக்ஷித்தாய்’
என்பதனை மெய்யேயன்றோ சொல்லுகிறது.
(6)
548
ஒண்சுட ரோடிருளு மாய்நின்ற
வாறும் உண்மை
யோடின்மையாய் வந்துஎன்
கண்கொளா வகைநீ
கரந்துஎனைச் செய்கின்றன
எண்கொள் சிந்தையுள்
நைகின்றேன்என் கரிய
மாணிக்கமே! என்கண் கட்குத்
திண்கொள ஒருநாள்
அருளாய்உன் திருவுருவே.
பொ-ரை :- உண்மையோடு வந்து ஒண்சுடராய் நின்றவாறும்,
இன்மையோடு வந்து இருளுமாய் நின்றவாறும், என் கண்களால் காண முடியாதவாறு உள்ளே மறைந்து நின்று
நீ செய்கின்றவற்றையும் எண்ண வேண்டும் என்று கொண்ட மனத்தோடு வருந்தாநின்றேன்; என் கரிய
மாணிக்கமே! உன் திரு உருவினை என் கண்களால் நன்கு காணும்படி ஒருநாள் திருவருள் புரிதல் வேண்டும்.
____________________________________________________
1. “உலகம் உண்ட ஒண்சுடரே”
என்பதற்குப் பொருள், உலகத்தை அமுது
செய்து, அதனாலே பேரொளிப்பிழம்பாய் விளங்குமவனே என்பது.
ஆயின், உலகம் உண்டால் ஒண்சுடர் ஆக வேண்டுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
‘உண்டி உடல் காட்டும்’ என்று.
2. “நின்று நின்று நினைகின்றேன்”
என்றதற்கு அருளிச்செய்த
முதற்பொருளினைத் திருவுள்ளம்பற்றி, “உலகம்” என்ற அஃறிணைச்
சொல்லிற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நினைக்கை குற்றமாய்’ என்று
தொடங்கி. என்றது,
‘நினைக்க மாட்டாதே இருக்கிற உலகத்தைக் காத்தாய்’
சேதனனான வாசிக்கு நினைக்கிற என்னைக்
காத்தல் ஆகாதோ என்றபடி.
3. “நின்று நின்று நினைகின்றேன்”
என்றதற்கு அருளிச்செய்த இரண்டாவது
பொருளுக்குத் தகுதியாக, பாவம் அருளிச்செய்கிறார்
‘நினைவுங்கூட’
என்று தொடங்கி.
4. “உலகமுண்ட ஒண்சுடரே”
என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
‘இவை ஆபத்துங்கூட’ என்று தொடங்கி.
‘மெய்’ என்றது
சிலேடை: சரீரமும், சத்தியமும்.
|