முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
472

New Page 1

பெற்றிலேன்; நடுவே நின்று கிலேசியாநின்றேன். முத்தர்க்குக் கூட்டு அல்லர், சம்சாரிகளுக்குக் கூட்டு அல்லர்; அந்தரப்பட்டு நிற்கிறாரன்றோ இவர்தாம். 1என் நெஞ்சிலே வந்து புகுந்து கண்களுக்கு விஷயமாகாமல் மறைய நின்று நீ என்னை நலிகிறவற்றையும். கண்கொளாவகை - கண்பார்க்காதபடி. எண்கொள் சிந்தையுள் நைகின்றேன்-எண்ணப்புக்கு, மனோரத மாத்திரத்திலே நையாநின்றேன். 2பெற்ற அம்சம்கொண்டு காரியம் கொள்ள மாட்டுகின்றிலேன். கைப்புகுந்ததுகொண்டு மேல் உள்ளது பெற விரகு பார்க்க மாட்டுகின்றிலேன்.

    என் கரிய மாணிக்கமே - 3கண்களுக்கு விஷயமாகிற பொருள்களைக்கொண்டு நான் காலம் போக்கமாட்டாதபடி, உன் வடிவின் சுவட்டினை அறிவித்தாயே. ‘இவ்வடிவினைப் பிரிந்தார்க்கு ஜீவிக்கவுமாம்’ என்று தோற்றியிருந்ததோ. என் கண்கட்கு - 4இவற்றின் விடாய் உனக்குத் தெரியுமன்றோ? ‘நான் பெற்றேன்’ என்றாலும் ஆறியிராதவையன்றோ? வேறொன்று இட்டு மறைக்கலாமவை அன்றே. திண்கொள்ள - ‘மானசாநுபவத்தைப் பிரத்யக்ஷசமாநாகாரமாகப் பண்ணினோமே’ என்று நீ சொல்லுமது எனக்கு வார்த்தையன்று காண். 5கனாவில்

____________________________________________________

1. “வந்து என் . . . . . . செய்கின்ற” என்பதற்குப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘என் நெஞ்சிலே’ என்று தொடங்கி.

2. “நைகின்றேன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘பெற்ற அம்சம்’
  என்று தொடங்கி. பெற்ற அம்சமாவது, மானசாநுபவம்.
  ‘காரியங்கொள்ளமாட்டுகின்றிலேன்’ என்றது, ‘இது உண்டாயிற்றே, மேலும்
  கிரமத்திலே பெறுகிறோம்’ என்று அவ்வளவும் ஆறியிருக்க
  மாட்டுகின்றிலேன் என்றபடி. மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
  ‘கைப்புகுந்தது’ என்று தொடங்கி. ‘கைப்புகுந்தது’ என்றது, மானசாநுபவத்தை.

3. “என்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘கண்களுக்கு’ என்று
  தொடங்கி. “கரிய மாணிக்கமே” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இவ்வடிவினை’ என்று தொடங்கி.

4. “என் கண்கட்கு” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவற்றின்
   விடாய்’ என்று தொடங்கி. ‘தெரியுமன்றோ’ என்றது. ‘இருடீகேசன்’
 
 ஆகையாலே தெரியும் அன்றோ என்றபடி.

5. “கண்ட கனாவின் பொருள்போல யாவும்பொய்; காலனென்னும்
   கண்டக னாவி கவர்வதுவே மெய்”

 
என்பது, திருவரங்கத்தந்தாதி.