முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
473

கண

கண்ட காட்சி போன்று மானசாநுபவம் ஆக ஒண்ணாது; நன்கு கண்கூடாகக் காண வேண்டும். இங்ஙன் செய்யப் போமோ? என்னில், 1சிலர்க்கு எப்பொழுதும் காணக்கூடியவனாக இருக்கிறாயே. ஒருநாள் அருளாய் - 2ஒரு நாள் அமையும் என்கிறாரல்லர், விடாயின் பெருமை சொல்லுகிறார்; விடாய்கொண்டவன் ‘ஒருகால் நாக்கு நனைக்க அமையும்’ என்றாற்போலே. ‘கிட்டினால் பின்னை விடும்படி சொல்லுகிறோம் என்று. உன் திரு உருவே - 3இது ஏதேனும் உன்னதோ! நோக்கிக்கொண்டு கிடக்கைக்கு; 4“உன் திருமேனி உனக்காக அன்று, உன் அடியார்கட்காகவே” அன்றோ.

(7)

549

        திருவு ருவுகிடந்த வாறும் கொப்பூழ்ச் செந்தா
                            மரைமேல் திசைமுகன்
        கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
        பொருவி லுன்தனி நாய கமவை கேட்குந் தோறும்
                            என்நெஞ்சம் நின்றுநெக்கு
        அருவிசோருங் கண்ணீர் என்செய்கேன் அடியேனே.

   
பொ-ரை :- அழகிய வடிவத்தோடு மஹாப்பிரளயத்தில் திருக்கண் வளர்ந்தருளினபடியும், திருவுந்தித் தாமரையிலே பிரமனாகிய சரீரத்திலே அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து எல்லாவற்றையும் உண்டாக்கின செயல்களுமாகிய, ஒப்பு இல்லாத உன்னுடைய தனித்த தலைமை பொருந்திய செயல்களைக் கேட்குந்தோறும் என்நெஞ்சமானது ஒருபடிப்பட நின்று நிலைகுலைந்து கண்ணீரானது அருவி போன்று விழா நின்றது; அடியேன் என்ன செய்வேன்?

    வி-கு :-
கரு - சரீரம். வீற்றிருத்தல் - வேறு ஒன்றற்கில்லாத சிறப்போடு எழுந்தருளியிருத்தல். நாயகம் - தலைமை. நெக்கு - நிலை குலைந்து.

_____________________________________________________

1. சிலர்க்கு - நித்தியசூரிகட்கு.

2. ஆசை அல்பமாய் “ஒருநாள்” என்கிறாரோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘ஒருநாள்’ என்று தொடங்கி. விடும்படி-விட்டுப்
  போகிறபடி.

3. “திருவுருவே” என்ற ஏகாரத்திற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இது
   ஏதேனும்’ என்று தொடங்கி.

4. ஜிதந்தா.