முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
475

ஆசனத

ஆசனத்தையுடையனாய்க் கொண்டு’ என்றாற்போலே, ‘கருவுள் வீற்றிருந்து’ என்கிறார். வீற்றிருத்தலாவது, தன் ஐஸ்வர்யத்தால் உள்ள மேன்மை தோன்ற இருத்தல். 1பொற்குப்பியில் மாணிக்கம் போலே. படைத்திட்ட கருமங்களும் - உண்டாக்கின வியாபாரங்களும்.

    பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு அருவி சோரும் கண்ணீர்-ஒப்பின்றிக்கே அத்விதீயமாய் ஐஸ்வர்யப் பிரகாசமான உன் குணங்களையும் செயல்களையும் கேட்குந்தோறும் என் நெஞ்சமானது மலைநெகிழ்ந்தாற்போன்று நெகிழ்ந்து, கண்ணநீர் அருவியாய்ப் பாயாநின்றது. என்செய்கேன் அடியேனே - பரதந்திரனான நான் காரியம் செய்து கொள்ளப் பார்த்திருக்கிறாயோ, 2வேறு ஒன்றாலே போது போக்கித் தரித்திருக்கவோ, நான் எதனைச் செய்வேன்?

(8)

550

        அடியை மூன்றை இரந்த வாறும்அங் கேநின் றாழ்கட
                                லும் மண்ணும்விண்ணும்
        முடிய ஈரடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
        நொடியு மாறவை கேட்குந் தோறும்என் நெஞ்சம்நின்த
                                    னக்கே கரைந்துகும்
        கொடிய வல்வினையேன் உனைஎன்றுகொல் கூடுவதே.

   
பொ-ரை :- மூன்று அடிகளை யாசித்த விதமும், யாசித்த அவ்விடத்திலேயே நின்றுகொண்டு ஆழ்ந்த கடல்களையும் பூலோகத்தையும் தெய்வலோகத்தையும் இரண்டு அடிகளிலே முடியும்படியாக அளந்து முடித்துக்கொண்ட முக்கியமும், அவற்றைச் சொல்லும்விதம் கேட்குந் தோறும் என் நெஞ்சமானது உன்னுடைய சீலகுணத்திலேயே கரைந்து உருகாநின்றது; மிகக் கொடிய பாவியேனான யான் தேவரீரைக் கூடுவது என்றுகொல்?

    வி-கு :-
மூன்று அடியை இரந்தவாறும் என்க. நொடியுமாறு - சொல்லும் வகை. உன்னைக் கூடுவது என்றுகொல் என்க.

_____________________________________________________

1. பரபாகத்தால் வந்த அழகு எனக் கொண்டு பொருள் அருளிச்செய்கிறார்
  ‘பொற்குப்பியில்’ என்று தொடங்கி.

2. “அருவிசோரும் கண்ணீர் என்செய்கேன்” என்று கூட்டி பாவம்
   அருளிச்செய்கிறார் ‘வேறு ஒன்றாலே’ என்று தொடங்கி.