|
பு
புரையே போகாமல் மர்மத்திலே
புக்கு. எனது ஆவியை-1“சேதிக்க முடியாதது, தகிக்க முடியாதது” என்கிற ஆத்மவஸ்துவை.
உருக்கி உண்டிடுகின்ற நின்தன்னை - நீர்ப்பண்டமாக்கி, முடித்துவிடாதே ஒழிகிற உன்னை. 2புருஷோத்தமன்
‘இப்படிச் செய்வதே’! என்று இக்குணத்தைச் சொன்னவளவிலே உருக் குலையாநின்றேன். தரித்து
அநுபவிக்கும்படி நல்விரகு சொல்ல வேண்டும். உம்மைத் தரிப்பிக்கப் போமோ நம்மால் என்ன,
‘நச்சு நாகணையானே’ என்கிறார். என்றது, ஒருவன் பரம போகியாய் நின்று தரித்து உன்னை அநுபவிக்கப்
பண்ணிக் கொடுத்திலையோ; அப்படியே நானும் தரித்து உன்னை அநுபவிக்கும்படி செய்தருள வேண்டும்
என்றபடி.
(10)
552
நாகணைமிசை நம்பிரான்
சரணேசரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க்
குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி
ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வெய்துவர்
வைகலுமே.
பொ-ரை :- திருவனந்தாழ்வானாகிற படுக்கையின்மேலே சயனித்திருக்கின்ற
நம்பெருமானுடைய திருவடிகளே உபாயம் என்று, திருக்குருகூரில் அவதரித்த மாறனான ஸ்ரீ சடகோபர் எப்பொழுதும்
ஒரே எண்ணத்தையுடையவராய்த் தாம் உளராதற்பொருட்டு அருளிச்செய்த அந்தாதியாகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள்
இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் கற்க வல்லவர்கள் பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தையடைந்து எப்பொழுதும்
ஆனந்தத்தையுடையவராயிருப்பர்.
வி-கு :-
குருகூர்ச் சடகோபன் மாறன் நமக்குப் பிரான் சரணே சரண் என்று நாடொறும் ஏக சிந்தையனாய்
ஆக நூற்ற அந்தாதி என்க. வல்லார் வைகலும் மகிழ்வெய்துவர். மாகம்-ஆகாசம்.
ஈடு :-
முடிவில். 3இப்பத்தும் கற்றார் பரமபதத்திலே சென்று நித்தியாநுபவம் பண்ணப் பெறுவர்
என்கிறார்.
_____________________________________________________
1. ஸ்ரீ கீதை.
2. உருக்கும் பிரகாரத்தைக்
காட்டுகிறார் ‘புருஷோத்தமன்’ என்று தொடங்கி.
‘இப்படிச் செய்வதே’ என்றது, இப்படிப் பெண்
வடிவினைக் கொள்வதே
என்றபடி.
3.
“இவையும் ஓர் பத்தும் வல்லார், மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர்”
என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
|