|
New Page 1
தையுடையனாய் இருக்கிறவனுடைய
1ஸ்ரீய:பதித்வத்திலும் ஒப்பனையிலும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள். மண்மேல் பண்தாம்
பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே-2“ஒண்தொடியாள் திருமகளும் நீயுமே” என்னும்
தேசம் ஒழிய, அதற்கு மாறுபட்ட பூமியிலே, வேறு ஒன்றனாலே தூண்டப்பட்டவர்களாய் அன்றிக்கே, தங்கள்
பிரீதிக்குப் போக்குவிட்டு, பண்மிகும்படி நின்று 3தாங்களே பாடி, அது இருந்த இடத்தில்
இருக்க ஒட்டாமையாலே ஆடி, பரந்து திரிகின்றார்கள்.
கண்டோம் கண்டோம்
கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
எனக் கூட்டுக.
(2)
456
திரியும் கலியுகம்
நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப்
பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில்வண்ணன்
எம்மான் கடல்வண்ணன் பூதங்கள்மண்மேல்
இரியப் புகுந்து இசை
பாடி எங்கும் இடம் கொண்டனவே.
பொ-ரை :-
பொருள்களின் தன்மையை மாற்றுகின்ற கலியுகம்
நீங்கும்படியாகவும், பெருமை பொருந்திய கிருதயுகத்தின் தன்மையை யுடைத்தாய்ப் பேரின்ப
வெள்ளம் பெருகும்படியாகவும், நித்தியசூரிகளும் புகும்படியாகவும், கரிய முகில்வண்ணனும் கடல்வண்ணனும்
எம்மானுமாகிய சர்வேச்வரனுடைய அடியார்கள் இந்த உலகத்தின் மேலே ஆரவாரம் உண்டாகும்படியாகப்
புகுந்து இசையோடு பாடி எல்லா இடங்களையும் தங்களுக்குரிய இடங்களாகக் கொண்டார்கள்.
வி-கு :-
நீங்கி, தேவர்கள் தாமும் புகுந்து என்னும் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களைச் செய
என்னும் வாய்பாட்டு எச்சமாகத் திரித்துக்கொள்க. நீங்கப் புகப் பெருகக் கடல் வண்ணன்
____________________________________________________
1. “மாதவன்” என்ற பதத்தைநோக்கி
‘ஸ்ரீய:பதித்வத்திலும்’ என்றும், “வண்டார்
தண்ணம் துழாயான்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி
‘ஒப்பனையிலும்’
என்றும் அருளிச்செய்கிறார்.
2. திருவாய். 4. 9 : 10.
3. ‘தாங்களே பாடி’ என்று
பொருள் அருளிச்செய்வதனால், “பண்தாம் பாடி”
என்ற பாடமே ஏற்புடைத்து. “பண்தான்
பாடி” என்பது இப்பொழுதுள்ள
பாடம்.
|