|
பற
பற்றி - கலிகாலம் முதலிய
காலங்களால் மறைக்கப்படுதல் இல்லாத 1ஒரு போகியான கிருதயுகத்தையுடையராய். பற்றி
- பற்றினவராய்; இது, தேவர்களுக்கு அடைமொழி. 2அன்றிக்கே, ஆப்பான் ‘ஆதி
சிருஷ்டியில் கிருதயுகத்தைக் காண் சொல்லுகிறது’ என்பராம். இங்கு, பற்றி என்பதற்குத் தொடங்கி
என்பது பொருள். பேர் இன்ப வெள்ளம் பெருக - அந்தம் இல்லாத பேரின்ப வெள்ளம் இங்கே உண்டாகும்படி.
பெரிய கிருதயுகம்பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக - ஆதிகிருதயுகம் தொடங்கி நடுவுள்ள கலிகாலத்தின்
தோஷங்கள் தெரியாதபடி பேரின்ப வெள்ளம் பெருகிற்று. 3‘கிண்ணகம் இத்தைப் பற்றிப்
பெருகிற்று’ என்னக் கடவதன்றோ. 4அன்றிக்கே, பற்றி என்பதற்கு, கலியைப் போகப்
பற்றி என்றும், கிருதயுகத்தைப் புகுரப் பற்றி என்றும் பொருள் கூறலுமாம். கரிய முகில் வண்ணன்
எம்மான் கடல் வண்ணன்
____________________________________________________
1. ‘ஒரு போகியான
கிருதயுகத்தை யுடையராய்’ என்பது முடிய, ஒரு கருத்து.
இக்கருத்திற்கு, “தேவர்கள் தாமும் புகுரலாம்படியாகவும்,
பேரின்ப வெள்ளம்
பெருகலாம்படியாகவும், திரியும் கலியுகம் நீங்க, பெரிய
கிருதயுகத்தையுடையரான
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன்
பூதங்கள் மண்மேல் இரியப் புகுந்து இசைபாடி எங்கும்
இடம் கொண்டன”
என்று சொற்களைப் பிரித்துக் கூட்டிப் பொருள் காண்க.
2. ‘அன்றிக்கே’ என்று தொடங்குவது,
வேறு ஒரு கருத்து. இக் கருத்திற்குத்
‘திரியும் கலியுகம் நீங்க, பெரிய கிருதயுகம் தொடங்கிப்
பேரின்ப வெள்ளம்
பெருகலாம்படியாகவும், தேவர்கள் தாமும் புகுரலாம்படியாகவும், கரிய முகில்
வண்ணன்
பூதங்கள் எங்கும் இடம் கொண்டன’ என்று கூட்டிப் பொருள்
காண்க.
3. “பற்றி” என்ற சொல்
‘தொடங்கி’ என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்.
‘கிண்ணகம்’ என்று தொடங்கும் வாக்கியம்.
கிண்ணகம் - ஆற்றுப் பெருக்கு.
4. “பற்றி” என்பதற்கு,
மூன்றாவதாக ஒரு பொருள் அருளிச் செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி. ‘கலியைப் போகப்
பற்றி, என்றது, கலியுகம்
போய் என்றபடியாய் ‘கலியுகம் நீங்கி’ என்றதனைக் காட்டியபடி.
‘கிருத
யுகத்தைப் புகுரப் பற்றி’ என்றது, கிருதயுகம் வந்து என்றபடி. ஆக, “பற்றி”
என்றதற்கு,
உடையராய் என்றும், தொடங்கி என்றும், வந்து என்றும் மூன்று
பொருள்கள் அருளிச் செய்தவாறு.
|