முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
52

457

457

    இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
    தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்க ளேயாய்க்
    கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
    நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.

   
பொ-ரை :- எல்லா இடங்களையும் தமக்கு உரிய இடமாகக் கொண்டுள்ள புறச்சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுமாறு போன்று, விசாலமான கடலிலே யோக நித்திரை செய்கின்ற சர்வேச்வரனுடைய அடியார்களேயாகிக் கிடந்தும் இருந்தும் எழுந்தும் பலப்பல இசைகளைப் பாடிக்கொண்டு நடந்தும் பறந்தும் ஆடியும் நாடகம் செய்யாநின்றார்கள்.

    வி-கு :-
தடம் கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைப் பூதங்கள் இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே  ஆய் நாடகம் செய்கின்றன என முடிக்க. பூதங்கள் செய்கின்றன என்க.

    ஈடு :-
நான்காம் பாட்டு. 1அசைக்க முடியாதவாறு வேர் ஊன்றியிருக்கின்ற புறச்சமயங்களை எல்லாம் வேரோடே அறுப்பாரைப் போன்று எங்கும் வைஷ்ணவர்களேயாகி, பகவானுடைய குணங்களை அநுபவிப்பதனால் உண்டாகின்ற சந்தோஷத்தாலே களித்துத் திரியாநின்றார்கள் என்கிறார்.

    இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே    - பயிர் தேயும்படி களை வளருமாறு போலே சத்துவ குணத்தையுடைய பெரியோர்கள் ஒதுங்கும்படி வளருகின்ற புறச் சமயங்களை எல்லாம் பறித்துப் போகடுவாரைப் போலே. ‘போலே’ என்பான் என்? என்னில், சத்துவ குணமுடைய பெரியோர்கட்குப் ‘பிறரை நலிய வேணும்’ என்ற ஓர் எண்ணம் இல்லையே அன்றோ; 2நெற்

_____________________________________________________

1. பாசுர முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். “இடம்
  கொள்” என்றதனை நோக்கி ‘அசைக்க முடியாதபடி’ என்கிறார்.

2. “நெற்செய்யப் புற்றேய்ந்தாற் போல நெடும்பகை
   தற்செய்யத் தானே கெடும்”

  என்பது, பழமொழி நானூறு. 83.