முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
53

New Page 1

செய்யப் புற்றேயுமா போலே, இவர்கள் ஊன்ற ஊன்ற அவர்கள் தாமாகவே தேய்வார்கள் அத்தனை. தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் - 1தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பிக் கண்வளர்ந்தருளுகைக்கு ஈடான பரப்பையுடைய திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிற அழகை நினைத்து, 2“பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும், காலாழும் நெஞ்சு அழியும் கண்சுழலும்” என்று அதிலே ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய். கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனித்தும் - தங்களுக்கு விருப்பமான எல்லாக் காரியங்களுக்கும் தகுதியாம் படி பூமியைக் கைக்கொண்டு, ஒவ்வோர் இடத்திலே இருந்தும், ஒவ்வோர் இடத்திலே நின்றும், பகவானுடைய அநுபவத்தின் மிகுதியால் வந்த களிப்பினால் பலப்பல பாட்டுக்களைப் பாடியும், மனத்தைக் கொள்ளை கொள்ளும்படியாக உலாவியும், கால் தரையிலே பாவாதபடி பரபரப்போடு நிருத்தம் செய்தும். நாடகம் செய்கின்றன - இவர்கள் செய்யும் காரியம் இவர்க்கு வல்லார் ஆடினாற் போலே இருக்கை. 3“எம்பெருமானாருடைய நிற்றல் நடத்தல் படுத்தல் முதலியவைகளை நாம் கொண்டாடுமாறு போலேயும், ஆளவந்தாருடைய நடையை அரசன் கொண்டாடினாற் போலேயும் இவர் கொண்டாடுகிறபடி” என்று அருளிச்செய்வர் நஞ்ஜீயர்.

(4)

458

    செய்கின்ற தென்கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
    வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
    ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
    உய்யும் வகை இல்லை தொண்டீர் உழி பெயர்த்திடும் கொன்றே.

___________________________________________________

1. திருவாய். 8. 10 : 8.

2. பெரிய திருவந். 34.

3. ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய  செயல்கள் இவர்க்கு மனக் கவர்ச்சியாக
  இருப்பதற்குத் திருஷ்டாந்தங்கள் காட்டுகிறார் ‘எம்பெருமானாருடைய’
  என்று தொடங்கி.