|
பு
புகுந்திருந்து. ஐயம் ஒன்று
இல்லை-‘இங்கே இருந்தே அவ்விருப்புக்குத் தோற்றிருப்பர்கள்’ என்றதில் ஒரு சந்தேகம் இல்லை.
அன்றிக்கே, ‘பேர்த்திடும்’ என்னுமதில் ஒரு சந்தேகம் இல்லை என்னலுமாம். அரக்கர் அசுரர் பிறந்தீர்
உள்ளீரேல் உய்யும்வகை இல்லை - இராக்கதத்தன்மை வாய்ந்தவர்களாயும் ஆசுரத்தன்மை வாய்ந்தவர்களாயும்
இருப்பார் மனித சரீரத்தை ஏறிட்டுக்கொண்டு, 1ஸ்ரீ வானர சேனையின் நடுவே சுக சாரணர்கள்
புகுந்தாற்போலே புகுரப் பார்த்தீர் உளராகில் உங்களுக்கு உஜ்ஜீவிக்க விரகு இல்லை. என்றது,
“ஒன்றும் தேவும்” என்ற திருவாய் மொழியைக் கேட்டுச் சம்சாரம் திருந்தினபடி. 2“வாழ்
ஆட்பட்டு நின்றீர் உள்ளீரேல்” என்று தேடவேண்டாதே, எல்லாரும் வாழாட்பட்டு, ‘அசுரர் பிறந்தீர்
உள்ளீரேல்’ என்று தேடவேண்டும்படியாயிற்று என்றபடி. தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே -
3”பிறர்க்குத் தொண்டு செய்தல் நாய்த்தொழிலாகும்” என்கிற மற்றை விஷயங்களிலே
தொண்டுபட்டிருக்க உங்களைக் கல்பந்தானே வருத்திக்கொண்டு, தானும் பேரும் என்னுதல்; அன்றிக்கே,
வைகுந்தன் பூதங்கள் உங்களையும் கொன்று ஊழியையும் பேர்ப்பர் என்னுதல்.
(5)
459
கொன்றுஉயிர் உண்ணும்
விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்றுஇவ் வுலகில்
கடிவான் நேமிப் பிரான்தமர் போந்தார்
நன்றுஇசை பாடியும்
துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின்
தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.
____________________________________________________
என்பது இது, நிகண்டு. இம்மூன்று
சொற்களும் ஒரு பொருளன.
இச்சையாலே-எங்கும் பரந்து சென்று திருத்தவேணும் என்னும்
இச்சையாலே.
1. ‘ஸ்ரீ வானர சேனையின்
நடுவே சுக சாரணர்கள் புகுந்தாற் போலே’ என்றது,
இராவணனுடைய ஒற்றர்களான சுகன் சாரணன் என்னும்
இருவரும் குரங்கு
உருக்கொண்டு குரங்குகளின் நடுவே புகுந்தாற்போலே என்றபடி.
2. திருப்பல்லாண்டு, 2.
3. “ஸேவா ஸ்வ விருத்தி:”
|