முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
57

மவர

மவர்கள் வந்தார்கள். போந்த நேமிப்பிரான் தமர், நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்-நன்றான இசை பாடியும், பரபரப்போடு நிருத்தம் பண்ணியும், இப்படிப் பூமி அடையப் பரந்தார்கள். சென்று தொழுது உய்ம்மின்-1அவர்கள் பாடே சென்று அவர்களைத் தொழுது உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல். அவர்களோடே சென்று சர்வேச்வரனை அடைந்து உஜ்ஜீவித்துப் போகுங்கோள் என்னுதல். தொண்டீர் - தக்கது அல்லாத விஷயத்தில் தொண்டுபட்டிருக்கிற நீங்கள். என்றது, 2திருந்துகைக்கு யோக்கியதையுடைய நீங்கள் என்றபடி. 3அது செய்யுமிடத்தில், சிந்தையைச் 4செந் நிறுத்தியே-தொழுத பின்னர் “எனக்கு ஒன்று தா, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாமல் வணங்குங்கோள் என்கிறார்.

(6)

460

  நிறுத்தி நும் உள்ளத்துக்கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
  மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
  கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
  இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.

    பொ-ரை :-
உங்கள் உள்ளத்திலே நிறுத்திக் கொள்ளுகின்ற தெய்வங்கள் உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளுவதும் மீண்டும் அவன் திருவருளாலேயாகும்; அதற்கு மார்க்கண்டேயனே சான்று ஆவான்;

____________________________________________________

1. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம், ‘அவர்கள் பாடே சென்று’ என்று தொடங்கும்
  வாக்கியம். எம்பெருமானார் நிர்வாஹம், ‘அவர்களோடே சென்று’ என்று
  தொடங்கும் வாக்கியம். பாடு - பக்கம்.

2. ‘திருந்துகைக்கு யோக்கியதையுடைய நீங்கள், என்றது, சிற்றின்ப விஷயத்திலே
  யாகிலும் சேஷத்வத்துக்கு இசைகையாலே, திருந்துகைக்கு
  யோக்கியதையுடைய நீங்கள் என்றபடி.

3. அது செய்யுமிடத்தில் - அந்த ஆஸ்ரயணத்தைச் செய்யுமிடத்தில்.

4. செந்நிறுத்தி - செவ்வையாக நிறுத்தி. சிந்தைக்குச் செவ்வையாவது, வேறு
  பிரயோஜனங்களை விரும்பாமை என்று கொண்டு, அதனை அருளிச்
  செய்கிறார் ‘தொழுத பின்னர்’ என்று தொடங்கி. “தேஹி மே ததாமி தே.”