|
461
461
இறுக்கும் இறை இறுத்து
உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி1
நிறுத்தினான் தெய்வங்களாக
அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன்
அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து
மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.
பொ-ரை :- தெய்வங்களுக்கு எல்லாம் நாயகனான அந்தச்
சர்வேச்வரன் தானே, நீங்கள் கொடுக்க வேண்டிய பொருள்களைக் கொடுத்து, அவர்கள் அருளைப் பெற்று
உஜ்ஜீவிக்கும்படி, தன் சரீரத்தையே எல்லா உலகங்கட்கும் தெய்வங்களாக நிறுத்தினான்; ஸ்ரீவத்சம்
என்னும் மறுவும் பிராட்டியும் தங்கியிருக்கின்ற திருமார்பையுடையவனான அவ் வெம்பெருமானுடைய அடியார்கள்
இசைகளைப் பாடிக் கொண்டு இந்த உலகத்திலே வெறுப்பு இல்லாமல் நிறைந்து வசிக்கின்றார்கள்;
நீங்களும் அவர்களை அடைந்து வணங்கி உய்ந்து போகுங்கோள் என்கிறார்.
வி-கு :-
உண்ண நிறுத்தினான்; தன்மூர்த்தியை எல்லா உலகுக்கும் தெய்வங்களாக
நிறுத்தினான் என்க. பூதங்கள் மிக்கார் என முடிக்க. பொருளை நோக்கி ‘மிக்கார்’ என உயர்திணை
முடிபு கொடுத்து ஓதுகிறார். நீர் மேவித் தொழுது உய்ம்மின் என்க.
ஈடு :- எட்டாம்
பாட்டு. 2இராஜசராயும் தாமசராயும் உள்ள சேதநர் குணங்களுக்குத் தகுதியாக அடையலாம்படி
_____________________________________________________
1. “அழல்புரை குழைகொழு நிழல்தரும்
பலசினை
ஆலமும் கடம்பும் நல்யாற்று
நடுவும்
கால்வழக் கறுநிலைக்
குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்!
எவ்வயி னோயும் நீயேநின்
னார்வலர்
தொழுதகை அமைதியின்
அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவ லாளனும்
நீயே
அவரவர் செய்பொருட்
கரணமும் நீயே”
என்பது, பரிபாடல். 4. 66-73.
2. ஆயின், இத்தகைய தேவர்களைச்
சர்வேச்வரன் படைப்பான் என்?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இராஜசராயும்’ என்று தொடங்கி.
“மறுத்திருமார்வன்” என்றதிலே நோக்காக ‘அவனுடைய அசாதாரண’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
|