முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
62

இதர

இதர தெய்வங்களை உலகம் அடங்கப் பரப்பி வைத்தான்; ஆகையாலே, அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் உலகம் அடங்கப் பரந்தார்கள்; நீங்களும் அவர்களைப் போன்று அவனை ஆஸ்ரயிக்கப் பாருங்கோள் என்கிறார்.

    இறுக்கும் இறை இறுத்து உண்ண தன்மூர்த்தி தெய்வங்களாக எவ்வுலகுக்கும் நிறுத்தினான்-செய்த பயிருக்குக் 1கடமை இறுக்குமாறு போன்று, உங்களுடைய புண்ணிய பாவங்களுக்குத் தகுதியாக அவ்வவ் தேவதைகளுக்குக் கொடுக்கும் திரவியங்களைக் கொடுத்து ஜீவிக்கைக்காக, எல்லா உலகங்களிலும் தனக்குச் சரீரமாக இருக்கிற தேவதைகளை நிறுத்தினான். என்றது, இராஜாக்கள் ஊர்தோறும் 2கூறு செய்வார்களை வைக்குமாறு போன்று நிறுத்தி வைத்தான் என்பார் ‘நிறுத்தினான்’ என்கிறார். அத்தெய்வ நாயகன் தானே - 3இவ்வுலகிலுள்ளாரோடு அந்தத் தேவர்களோடு வேற்றுமை யற எல்லார்க்கும் ஒக்க நியமிக்கின்றவனாய் இருக்கிற தானே. மறுத் திரு மார்வன் - ஸ்ரீவத்ஸத்தையும் பிராட்டியையுமுடைய மார்வன் என்னுதல்; ஸ்ரீவத்ஸத்தையுடைய அழகிய மார்வையுடையவன் என்னுதல். அவன் பூதங்கள்-அவனுடைய அசாதாரண விக்கிரஹத்தில் தோற்றிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள். கீதங்கள் பாடி வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார்-பிரீதியின் மிகுதியாலே கீதங்களைப் பாடி, ‘சம்சாரத்தில் வசிக்க வேண்டியிருந்ததே!’ என்கிற வெறுப்பு இன்றிக்கே பூமி எங்கும் பரந்தார்கள். நீர் மேவித் தொழுது உய்ம்மின் - 4ஆன பின்பு, நீங்கள் சென்று அவர்களை அடைந்து உஜ்ஜீ

_____________________________________________________

1. கடமை-கடனும் வரியும். ‘புண்ணிய பாவங்கட்குத் தகுதியாக’ என்றது,
  புண்ணியம் பெருகுவதற்கும், பாவம் குறைவதற்கும் தகுதியாக என்றபடி.

2. கூறு செய்வார்களை-வரி வசூலிக்கும் மணியக்காரர்களை.

3. “அத்தெய்வ நாயகன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இவ்வுலகிலுள்ளாரோடு’ என்று தொடங்கி.

4. “மேவித் தொழுது உய்ம்மின்” என்பதற்கு, இருவகை நிர்வாஹங்கள்: முதல்
  நிர்வாஹம், ஸ்ரீ ஆளவந்தாருடையது. இங்கே தொழுதல், பாகவதர்களைத்
  தொழுதல். இரண்டாவது, எம்பெருமானாருடையது. இங்கே ‘தொழுதல்’
  என்றது, பகவானைத் தொழுதல்.