|
ந
நீர் மேவித் தொழுது
உய்ம்மின் - நீங்கள் வேறு பயன் ஒன்றனையும் கருதாதவர்களாய்க் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கப்
பாருங்கோள். வேதப் புனித இருக்கை நாவிற் கொண்டு - 1வேதத்தில் அவன் விபூதி
விஷயமாகப் பரக்குமவற்றை அன்றிக்கே, அசாதாரண விக்கிரஹத்திலும் குணங்களிலும் ஸ்வரூபத்திலுமாகப்
பரந்திருக்கிற ஸ்ரீ புருஷசூக்தாதிகளை நாக்கிலே கொண்டு. அச்சுதன் தன்னை-2இவர்கள்
நாவிலே கொண்டு மனத்தோடு படாமல் சொன்னால் அதனை மனத்தொடு பட்டதாகக் கொண்டு 3“அவர்களை
விடமாட்டேன்” என்னுமவன். ஞானவிதி பிழையாமே-பக்தியினாலே தூண்டப்பட்டுச் செய்கின்ற காரியங்களில்
ஒன்றும் தப்பாமல். ‘ஞானம்’ என்கிறது, ஞான விசேஷமான பக்தியை. பூவின் புகையும் விளக்கும் சாந்தமும்
நீரும் மலிந்து - பூவோடே கூடின புகை தொடக்கமான சமாராதந உபகரணங்களை மிகுத்துக் கொண்டு. மேவித்
தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகம்-அவனை விடாமல் நின்று அடிமை செய்யுமவர்களாலும், குணங்களை
அநுசந்தானம் செய்வதற்கு அவ்வருகு ஒன்றுக்கும் ஆற்றல் இல்லாதே இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களாலும்
மிக்கது உலகம். என்றது, தொடர்ந்து அடிமை செய்யும் இளைய பெருமாளையும், கிடந்த இடத்தே கிடந்து
குணாநுபவம் செய்யும் ஸ்ரீ பரதாழ்வானையும் போலே இருப்பாரே ஆயிற்று உலகம் அடைய என்றபடி. ஆதலால்,
நீங்களும் மேவித் தொழுது உய்ம்மின் என்க.
(9)
______________________________________________________
1. புனிதம் என்றதன்
பொருளைக் காட்டுகிறார் ‘வேதத்தில்’ என்று தொடங்கி.
2. நாவிற்கொண்டு என்பதற்கு,
மனத்தொடு படாமல் நாக்கில் மாத்திரமே
கொண்டு என்று வியாக்கியானம் செய்திருப்பதால், வேதப்புனித
இருக்கை
நாவிற்கொண்டு அச்சுதன் தன்னை மேவித் தொழுது உய்ம்மினீர்கள் என்று
கூட்டி,
“நாவிற்கொண்டு” என்பதனை, உபதேசிக்கப்படுகின்றவர்களுக்கு
அடைமொழி ஆக்குக. நாவிற் கொண்டு
ஞானவிதி பிழையாமே மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் என்று கூட்டற்க. என்னை? எனின்,
பிழையாமல் மேவித் தொழும் அடியார்க்கு, “நாவிற்கொண்டு” தொழுதல்
குற்றமாதல் காண்க.
3. ஸ்ரீராமா. யுத்.
|