முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
67

464

என்கிறபடியே, கலிதோஷங்கள் ஒன்றும் வாராதபடி தன் அடியார்க்கு அருள் செய்யும். 1நாட்டுக்கு இட்ட அஃகம் அல்லவே யன்றோ அந்தப் புரத்துக்கு இடுவது. மலியும் சுடர் ஒளி மூர்த்தி-சுடர் என்றும் ஒளி என்றும் பரியாயமாய், இரண்டாலும் மிகுதியைச் சொல்லுகிறது. மலிதல்-நிறைதலாய், மிக்க ஒளியாலே நிறைந்த வடிவு என்றபடி. இதனால், அருள்செய்யாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகைக் கூறியபடி. மாயம் பிரான் கண்ணன் தன்னை-ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடைய கண்ணனை ஆயிற்றுக் கவி பாடிற்று. கலி வயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்-கலி என்று, மிடுக்குக்கும் ஆரவாரத்துக்கும் பெயர். இவற்றால், பூசாரத்தைச் சொல்லுதல்; நடுவது, அறுப்பது, உழுவதாகச் செல்லும் ஆரவாரத்தைச் சொல்லுதல். இப்படிப்பட்ட வயல்களையுடைத்தாயிருந்துள்ள திருநகரியில் ஆழ்வார் அருளிச்செய்த. ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்-பிரசித்தமான புகழையுடைத்தான ஆயிரத்திலும், இந்தப் பத்தும், 2வேறு தேவர்கள் பக்கல் பரத்துவ

______________________________________________________

1. எல்லார்க்கும் கலியுகமாக இருக்க, அடியார்க்கு அந்த தோஷம் ஒன்றும்
  வாராதபடி அருள் செய்யும்படி எப்படி? என்ன, ‘நாட்டுக்கு’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். அஃகம்-முறைமை.

  “ஒழிகஇக் காமம் ஓரூர் இரண்டஃகம் ஆயிற் றென்றாங்
   கழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட வன்றே”

  என்றவிடத்து, ‘ஓரூரிடத்தே இரண்டு முறைமை நிகழ்ந்ததாதலால்’ ஈண்டு
  நிகழ்த்துகின்ற காமத்தை ஒழிக என்று அழுத கண்ணீர்கள் மைந்தன்
  உயிரைக் கெடுத்த என்க, என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர்.
  (சிந். 2087.)

      “ஓரூர் இரண்டஃகம் காட்டினையால்” என்பது, பதினோராம் திருமுறை.
  பொன்வண்ணத்தந். 73.

  “அஃகம் சுருக்கேல்” என்பது, ஆத்திசூடி.

2. இத்திருவாய்மொழியிலுள்ள “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை”,
  “தொழுது தொழுது நின்று ஆர்த்தும்”, “ஊழிபெயர்த்திடும் கொன்றே”,
  “சிந்தையைச் செந்நிறுத்தியே” என்பன போன்றவைகளைக் கடாக்ஷித்து
  ‘வேறு தேவர்கள் பக்கல்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.