|
New Page 1
செய்து 1கைஒழிந்த
பின்பு பழைய தம் இழவே தலை எடுத்து, ‘வழி அல்லா வழியேயாகிலும் கிட்டுமத்தனை’ என்னும்படியான
விடாய் பிறந்து மடல் எடுக்கையிலே ஒருப்பட்டுப் பேசுகிறார் இத்திருவாய்மொழியில் என்னுதல்.
2ஒவ்வொரு விஷயத்திலே ஒவ்வொருவருக்குப் பற்று உண்டானால் அவ்விஷயங்கள் கிடையாவிட்டால்
‘அவற்றை அப்போதே பெறவேணும்’ என்னும்படியான மனோவேகம் பிறந்தால், பின்பு அவ்விஷயங்கள்
இருந்த இடங்களிலே புகை சூழ்ந்து புறப்பட வேண்டி இருப்பது ஒரு சாகசத்தைச் செய்து புறப்பட விடுவித்து
முகத்திலே விழிப்பாரைப் போலே, ‘அத்தலைக்குப் பழியை விளைத்தாகிலும் முகத்திலே விழிக்குமத்தனை’
என்று சாகசத்திலே ஒருப்பட்டு, தனக்கு இவ்வளவாகப் பிறந்த நிலையை அந்யாப தேசத்தாலே
பேசுகிறார்.
3‘அபிமத
விஷயத்தைப் பிரிந்து ஆற்ற மாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு தமிழர்
சொல்லிப் போருவது. அதாவது, 4“ஒத்த சீலம் வயது
______________________________________________________
1. கை ஒழிந்த பின்பு - திருத்துகிற
காரியம் முடிந்த பின்பு. ‘பழைய தம்
இழவே’ என்றது, “ஏறாளும் இறையோனும்’ என்ற திருவாய்மொழியின்
இழவே என்றபடி. ‘வழி அல்லா வழியே யாகிலும்’ என்றது, ஈச்வரனாலேயே
பெறுகை அன்றிக்கே, வேறு
சாதனங்களைச் செய்தேயாகிலும் பெறுதலைக்
குறித்தபடி.
2. மடல் எடுத்தல் என்பதனை,
மேலே ஒரு திருஷ்டாந்தத்தைக் கொண்டு
விளக்கி அருளிச்செய்தார். இங்கு, வேறும் ஒரு திருஷ்டாந்தத்தால்
அதனை
விளக்குகிறார் ‘ஒவ்வொரு விஷயத்திலே’ என்று தொடங்கி. ‘ஒரு சாகசத்தைச்
செய்து’ என்றது,
நெருப்பை வைத்தலைக் குறித்தபடி. ‘முகத்திலே
விழிக்குமத்தனை’ என்றது, இத்திருவாய்மொழியில்
வருகின்ற “தூமுறுவல்
தொண்டை வாய்ப் பிரானை” என்ற பகுதியைத் திருவுள்ளம்பற்றி.
அந்யாபதேசம்
- பிறர் பேச்சு; வேறு வகையாலே பேசுதல்.
3. மடல் எடுத்தல் என்பது,
புனைந்துரையாகச் சொல்லப்படுதலே அன்றி,
சாஸ்திர சித்தம் ஆமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்
‘அபிமத விஷயத்தை’ என்று தொடங்கி. என்றது, சமய சித்தம் என்றபடி.
அபிமத
விஷயம் - தம் காதலுக்குரிய பொருள், என்றது, தலைவியை.
4. “துல்யசீல வயோ வ்ருத்தாம்
துல்யாபிஜனலக்ஷணாம்
ராகவ: அர்கதி வைதேஹீம்
தம்சேயம் அசிதேக்ஷணா”
என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 5.
|