முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
8

1அன

    1அன்றிக்கே, காப்பார் ஆர் என்பதற்கு, கிருபை உண்டாவதற்குக் காரணமான பிராட்டி காக்கவோ? கிருபைக்குப் பரதந்திரப்பட்டவனான நீ காக்கவோ? கிருபைக்குப் பாத்திரமான நான் காக்கவோ? என்று பொருள் கோடலுமாம். 2“மித்ர பாவேந” என்கிற சுலோகத்திலே எம்பார், ‘சாவஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வசக்திக்கு ஒரு அசத்தியும் உண்டு’ என்று அருளிச்செய்வர். ஒருவன், தன்னை அடைந்தால், முன்பு புத்தி பூர்வம் பண்ணிப்போந்த குற்றங்களிலே மறதி, ஞானம் பிறந்த பின்பு தன்னை அறியாமலே வரும் குற்றங்களில் அஜ்ஞானம் அவனை விடவேண்டி வருமளவிலே அசக்தி. இப்படி இருக்கைக்குக் காரணம், 3இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு.

    “ஆர்” என்பான் என்? ஸ்வதந்திரனான என்னால் தகையத் தட்டு என்? என்ன, ஐயோ! - ஆமாகில் செய்து பார்த்துக்காணாய். ‘ஐயோ!’ என்பது, உவப்பின் மிகுதியினாலே சொல்லும் சொல். கண்ணபிரான் உபகார சீல

_______________________________________________ 

1. “காப்பார் ஆர்” என்றதற்கு, இரண்டாவது பொருள், இதற்குக் கிருஷி
  செய்தவர்கள் தகைவர்களோ? என்பது. இதனை அருளிச்செய்கிறார்
  ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. “ந கச்சித் ந அபராத்யதி-குற்றம் செய்யாதார்
  ஒருவருமிலர்” என்கிறபடியே, கிருபையுண்டாவதற்குக் காரணமான பிராட்டி
  காக்கவோ? “தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் என்னடியார் அது
  செய்யார். செய்தாரேல் நன்று செய்வர்.” என்கிறபடியே, கிருபைக்குப்
  பரதந்திரனான நீ காக்கவோ? “கிருபயா பர்ய பாலயத்-கிருபையாலே
  காப்பாற்றினான்” என்கிறபடியே, கிருபைக்குப் பாத்திரமான நான்
  காக்கவோ? என்றபடி.

2. இப்போது கிருபா பரதந்திரனாய் இருந்தானேயாகிலும், சர்வஜ்ஞன் சர்வசக்தி
  அலனோ, அபராதங்கட்குத் தகுதியாக அவற்றின் காரியங்களும் பிறவாவோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “மித்ரபாவேந” என்று தொடங்கி.

  “மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சந
  தோஷோ யத்யபி தஸய ஸ்யாத் ஸதாமேத தகர்ஹிதம்.”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 18:3. இந்தச் சுலோகத்தில் உள்ள “தோஷோ யத்யபி”
  என்றதனை நோக்கி ‘அஜ்ஞானமும் மறதியும்’ என்றும், “கதஞ்சந
  நத்யேஜயம்” என்றதனை நோக்கிச் ‘சர்வசக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’
  என்றும் அருளிச்செய்கிறார்.

3. ‘இயல்பிலே அமைந்த குடல் தொடக்கு’ என்றது நாராயண பதத்தால்
  கூறப்படுகின்ற சம்பந்தத்தைத் திருவுள்ளம்பற்றி.