|
இடத
இடத்தில், அது தம் கையது
அன்றிக்கே, அவன் உளனாக இது அழியாததாய் இருந்தது; இனி அத்தலையே பிடித்து வேர்ப்பற்றோடே
அழிக்கப் பார்க்கிறார்; 1உண்டாம் போதும் அத்தலையாலே உண்டாய், இல்லையாம்
போதும் ஒன்றும் இல்லையாம்படி அன்றோ வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது. 2“உயிரினாற்
குறை இலம்” என்றார் அங்கு; இங்கு, உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கிறார். “ஏறாளும்
இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா
என்றார்; இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என்கிறார். 3“இராவணன்
மாயா சிரசைக் காட்டினபோது, மற்றைய பெண்கள் மனத்தோடு படாமலே அழுமாறு போன்று, தன் ஆற்றாமையாலே
கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ்வார்த்தை கேட்டபோதே முடியாதிருப்பான் என்?” என்று
பட்டரைச் சிலர் கேட்க, ‘ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல;
அத்தலையில் சத்தையும் அது இல்லாமையும் ஆயிற்று; அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று
அருளிச்செய்தார்.
4இப்படி
அத்தலையை அழித்தாகிலும் முகங்காட்டுவித்துக்கொள்ள வேண்டும்படி தமக்குப் பிறந்த நிலை
_____________________________________________________
1. அவனை அழித்தால் தம்முடைய
சொரூபம் அழியுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘உண்டாம் போதும்’ என்று தொடங்கி.
2. மேற்கூறிய சங்கையை (ஐந்தாம் சங்கை) வேறு ஒரு வகையிலும்
பரிஹரிக்கிறார் ‘உயிரினாற் குறை இலம்’ என்று தொடங்கி.
இது, ஆறாம்
பரிஹாரம். என்றது, ஸ்வரூபத்திற்கு விரோதம் ஆனாலும், ஆற்றாமையின்
முறுகுதலாலே ஸ்வரூபத்தை
மீறி அவனை அழிக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியைக்காட்டிலும்
இங்கு ஆற்றாமை அதிகம் என்பது கருத்து. உயிரினால்-சர்வேச்வரனால்.
3. ‘உண்டாம்போதும் அத்தலையாலே
உண்டாய்’ என்பதற்கு, அவன் சத்தைக்
காரணமாக இத்தலையில் சத்தை உண்டாதலை எங்கே கண்டோம்?
என்ன,
அதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘இராவணன்’ என்று தொடங்கி. இவ்விடத்தில்
நாலாம்பத்து
ஈட்டின் தமிழாக்கம், பக். 204, 205 காண்க.
4. ஆக, இதுகாறும் பிராசங்கிகமாகச்
சங்கைகளையும், அவற்றிற்குச்
சமாதானங்களையும் அருளிச்செய்து, இனி, இத்திருப்பதிகத்தில்
சொல்லப்பட்ட பொருளை அருளிச்செய்கிறார் ‘இப்படி’ என்று தொடங்கி.
|