|
க
காலம் உண்டு இப்படிக்
கிலேசப்படுகிறது என்பாள் ‘எனை நாளையம்’ என்கிறாள். என்றது, அவன் என்னைப் பெறுகைக்குப்
பட்ட காலம் எல்லாம் போராவோ நான் அவனப் பிரிந்து பட்டவை என்றபடி. 1காலம்
எல்லாம் தேடிக் காணப் பெறாமல் துக்கப்பட்டுத் திரிந்த தத்தனை யாகாதே தான்; சிறைக்கூடத்திலே
பிறந்து அங்கே வளருமாறு போலே. 2பிரிவினாலே ஊகிக்கப்படுமித்தனை காணும்
புணர்ச்சி.
எல்லாம் செய்தாலும்
இது அறிவுடையார் செய்வது ஒன்று அன்று என்ன, அறிவு இழந்து எனை நாளையம் - அறிவு குடிபோய் எத்தனையோர்
காலத்தோம். 3மயர்வற மதிநலம் அருளின அன்றே போயிற்று இல்லையோ நம்முடைய அறிவு.
4பறவை முதலானவற்றின் காலிலே விழுந்து தூது விட்ட அன்று, ‘அது ஞான கார்யம்’
என்று இருந்தாயோ, இன்று இருந்து கற்பிக்கைக்கு; அன்றே மதி எல்லாம் உள் கலங்கிற்று இல்லையோ.
5தன்பக்கல் கைவைத்தால் மற்றொன்று அறியாதபடி செய்யும் விஷயமே அன்றோ,
‘பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதார்
____________________________________________________
1. “எனை நாளையம் நாடியே
பாசறவெய்தி” என்று கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘காலம் எல்லாம்’ என்று தொடங்கி. காலமெல்லாம்
துக்கம் அடைந்தமைக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘சிறைக்கூடத்திலே’
என்று தொடங்கி.
இதனால், துக்கத்தின் மிகுதியாலே எல்லாக் காலமும்
துக்கப்பட்டதாகத் தோற்றுகிறது என்பது
கருத்து.
2. ஆனால், புணர்ச்சி எப்பொழுதுமே
இல்லையோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிரிவினாலே’ என்று தொடங்கி.
3. அப்படிப் பல காலம் ஆயிற்றோ?
என்ன, “மயர்வற” என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
4. “அஞ்சிறைய மடநாராய்”
என்ற திருப்பதிகத்தைத் திருவுள்ளம்பற்றி, ‘பறவை
முதலானவற்றின்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
கற்பிக்கைக்கு -
‘மடல் எடுக்க வேண்டா’ என்று கற்பிக்கைக்கு. “மதி எல்லாம் உள் கலங்கி
மயங்குமால் என்னீரே” என்பது, திருவாய். 1. 4. 3.
5. மதி கலங்கினால்,
“ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை” என்னும்படி என்?
என்ன, ‘தன் பக்கல்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
தன் பக்கல் - சர்வேச்வரனாகிய தன் பக்கல். இதனால், உலக ஞானம்
இல்லை என்றதித்தனைப் போக்கி, பகவத் விஷய ஞானம் இல்லை
என்கிறது அன்று என்பது கருத்து.
அதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
“பேரின்பம் எல்லாம்” என்று தொடங்கி. இது, இரண்டாம் திருவந்.
42.
|