|
ய
யிலே நிற்கிற எனக்கு,
இது ஏசாம்படி இருப்பார் சொல்லும் வார்த்தை கொண்டு கார்யம் என்? ஊரார் பழி, புகழாம் எல்லையிலே
அன்றோ நாம் நிற்கிறது. 1அவர்கள் சொல்லுகிற இது நமக்குத் தாழ்வேயோ, தாரகமாமித்தனை
அன்றோ? “அலர் எழ ஆருயிர் நிற்கும்” என்னக்கடவதன்றோ. “அலர் தூற்றிற்று அது முதலாக் கொண்ட
என் காதல்” என்கிறபடியே, அவர்கள் பழி தாரகமாக அன்றோ மடல் எடுக்க இருக்கிறது.
(1)
466
என்செய்யும் ஊரவர்
கவ்வை? தோழீ! இனிநம்மை
என்செய்யத் தாமரைக்
கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன்செய்ய மாமை இழந்து
மேனி மெலிவெய்தி
என்செய்ய வாயும்
கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.
பொ-ரை :-
தோழீ! என்னுடைய செந்தாமரைக் கண்ணன், என்னுடைய
நிறையைக் கொண்டான்; முன்பு இருந்த சிறந்த மாமை நிறமும் நீங்கிச் சரீரமும் மெலிவை அடைந்து
என்னுடைய செவ்வாயும் கருங்கண்களும் பசலை நிறத்தை அடைந்தன; ஆதலால், இனி ஊரவர் கூறுகின்ற பழிச்சொற்கள்
நம்மை என் செய்யும்? என்கிறாள்.
வி-கு :-
இழக்க எய்த பயப்பு ஊர்ந்த என்க. பயப்பு - பசப்பு. ஊரவர் கவ்வை இனி நம்மை என் செய்யும்
என்க. மாமை-அழகு. நிற விசேடமுமாம்.
ஈடு :-
2மேல் திருவாய்மொழியில் நின்றும் இத்திருவாய்மொழிக்குப் புகுருகைக்கு வழி இரண்டாக
____________________________________________________
பாவம் அருளிச்செய்கிறார்
‘ஏசறும் எல்லையிலே’ என்று தொடங்கி.
இது-மடல்.
1. “என்செய்யும்” என்ற
ஸ்வரத்துக்கு, எதிர்மறையிலே நோக்காக வேறும் ஒரு
கருத்து அருளிச்செய்கிறார் ‘அவர்கள்
சொல்லுகிற இது’ என்று தொடங்கி.
பழி தாரகம் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார். “அலர்
எழ” என்று
தொடங்கி.
அலரெழ ஆருயிர் நிற்கும்
அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
என்பது, திருக்குறள்.
“அலர் தூற்றிற்றது முதலா”
என்பது, திருவாய். 7. 3 : 8.
2. முதற்பாசுரத்திற்கு
வியாக்கியானம் அருளிச்செய்த பின்னர், நடுவில் ஒரு
ஸ்ரீ வைஷ்ணவர் அங்கு வந்து, ‘முன்னுரையையும்
முதற்பாசுரத்திற்கு
வியாக்கியானத்தையும் அடியேனுக்கு அருளிச்செய்ய
|