முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
98

New Page 1

மைக்குத் தாமரைக் கண்ணனாய் இருத்தல் எல்லையாய் இருக்குமாறு போல ஆயிற்று இவள் பெண் தன்மைக்கு நிறை எல்லையாய் இருக்கும்படி. அவன் புருஷோத்தமன் ஆனாற் போலே ஆயிற்று, இவள் பெண்ணுக்குள்ளே உத்தமியாய் இருக்கும்படி. 1பிரிவோடே இருந்து மடல் ஊர்ந்து பழி விளையாநிற்கச் செய்தேயும் ‘என்னுடையவன்’ என்னலாம்படி காணும் அவன் கிட்டினால் இருக்கும்படி; ஆதலின், ‘என் தாமரைக் கண்ணன்’ என்கிறாள். 2நூறாயிரம் புருஷோத்தமர்கள் கூடினாலும் தோற்றுப்போம் இதற்கு மேற்படச் செய்யலாவது இல்லை என்றாயிற்று, இவளுடைய பெண் தன்மைக்குரிய அபிமானந்தான் இருப்பது; ஆதலின், ‘என்னை நிறைகொண்டான்’ என்கிறாள். என்றது, கடலைத் தறை காணுமாறு செய்வது போன்று, என்னைச் செய்தான் என்றபடி. 3தன்னுடைய ஆண் தன்மை முழுதையும் அழிய மாறி என்னுடைய

_____________________________________________________

  டாந்தமாக்கி, “நிறை” என்பதற்கு அடக்கம் என்று பொருள்
  கூறத்திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் “என்னை நிறைகொண்டான்”
  என்று தொடங்கி. என்றது, விலக்ஷணமான இந்தத் தலைவியை அபஹரிக்க
  நினைத்தவன், தன் வைலக்ஷண்யத்தைக் காட்டி அபஹரித்தான் என்றபடி.
  இங்கு “என்” என்பதற்கு எனக்கு என்பது பொருள். என்றது, தாமரைக்
  கண்ணனான ஆகாரத்தை எனக்குக் காட்டி என்பது பொருள். ஆக, “என்”
  என்பதற்கு, என்னுடைய என்பதாகவும், ‘எனக்கு’ என்பதாகவும்; “செய்யத்
  தாமரைக் கண்ணன்” என்பதற்கு, வாத்சல்யகுண பரமாகவும், பரத்துவ
  பரமாகவும்; “நிறை” என்பதற்கு, ‘எல்லாம்’ என்பதாகவும், ‘அடக்கம்’
  என்பதாகவும், பொருள் அருளிச்செய்துள்ளமை அறியலாகும்.

1. பிரிவு சமயத்திலே “என்” என்கிறது என்? என்ன, அவன் கலந்தபோது
  ‘நான் உன் சரக்கு அன்றோ’ என்று கண்வழியாலே சொன்னது கொண்டு
  “என்” என்கிறாள் என்று மேலே ஒரு கருத்து அருளிச்செய்து, அவன்
  கிட்டினபோது தாழ நின்று பரிமாறினமையைப்பற்ற “என்” என்று
  சொல்லுகிறாள் என்று வேறு ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘பிரிவோடே’
  என்று தொடங்கி.

2. “நிறைகொண்டான்” என்றபோதே ‘என்னுடைய’ என்பது தானே
  போதருமாதலின் “என்னை” எனல் வேண்டா அன்றே? அங்ஙனமிருக்க,
  “என்னை” என விசேடித்துக் கூறியதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
  ‘நூறாயிரம்’ என்று தொடங்கி. என்றது, அவனுடைய ஆண் தன்மைக்கும்
  மேற்பட்டிருக்கும் இவளுடைய பெண் தன்மை என்றபடி.

3. இப்படி மேற்பட்டிருந்தால், நிறை கொள்ளக் கூடுமோ? என்ன, மேலேயுள்ள
  பதங்களையும் கூட்டிக் கருத்து அருளிச்செய்கிறார்