முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
10

பாதகமாகை. வந்து - 1“பம்பையின் கரையிலே அநுமானோடு கூடினார்” என்பதுபோலே, ஆள்இட்டு அறிவிக்கவேண்டிய நிலையிலே நீங்களே வந்து. 2வழி பறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற்போலே காணும் பிராட்டியைப் பிரிந்து நோவுபடுகிற சமயத்திலே திருவடி வந்து முகங்காட்டினபடி. ஹநூமதா-தளர்ந்து, 3“ஆவாரார்துணை” என்று தடுமாறுகிற சமயத்திலே, 4வெற்றித் தழும்பு சுமந்த ஆண்பிள்ளையோடே கூடப்பெற்றது என்கிறது. வாநரேண-சந்நியாசி வேடம்கொண்டுவந்து பிரிவைவிளைத்து நலிவு பண்ணுமவனைப் போலன்றிக்கே, செவ்வியான் ஒருவனோடே சேரப் பெறுவதே. ஹ - 5ருஷி கொண்டாடுகிறான். போகத்துக்குச் சேர்த்துக்கொள்ளுகிறோம், சத்தைநோக்குவாரைப் பெற்றோமன்றோ! என்று உவகை கொண்டவனாகிறான். 6அவனைப்போலே தூதர்க்கும் ஆள் இட்டு அழைக்கவேண்டாதொழியப் பெற்றோமே! ஆள்இட்டு

 

1. பாதகக் கூட்டங்கள் மிகைக்கின்ற இந்நிலையிலே முகங்காட்டினதற்குத்
  திருஷ்டாந்தம் காட்டுகிறார் “பம்பையின் கரையிலே” என்று தொடங்கி.

 
“பம்பாதீரே ஹநூமதா ஸங்கத: வாநரேண ஹ”

  என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 8.

2. “பம்பாதீரே ஸங்கத்:” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வழிபறி
  உண்டவிடத்தே’ என்று தொடங்கி.

3. திருவாய். 5. 1 : 9.

4. “ஹநூமதா” என்ற பெயரின் பொருளைக் கடாக்ஷித்து ‘வெற்றித்தழும்பு
  சுமந்த’ என்கிறார்.

  சீர்பெற் றொளிர்பூண் அஞ்சனை தன் சிறுவன்தன்னை முகநோக்கிக்
  கூர்பற் றியஎன் குலிசத்தால் கூறு படுபுண் வடுத்தீர்க
  ஆர்பெற் றார் நீ பெற்றதுநின் அநுவற் றிடலால் அநுமனெனும்
  பேர்பெற் றுலக முள்ளளவும் பெறுதி பெயராப் புகழ்என்றான்.

  என்ற செய்யுள் இங்கு நினைவுகூர்தல் தகும். (கம். உத்தரகாண். அநுமப்
  பட. 34.)

5. ருஷி - வான்மீகிபகவான். கொண்டாடுவதற்குக் காரணம் யாது? என்ன,
  ‘போகத்துக்கு’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

6. ‘ஆள் இட்டு அறிவிக்கவேண்டிய’ என்று தொடங்கி அருளிச் செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘அவனைப்போலே’ என்று
  தொடங்கி. ‘அவனைப்போலே’ என்றது, உங்களை இட்டு நாயகனை
  அழைக்குமாறு போலே என்றபடி. தூதர்க்கும் - தூதராகிய உங்களுக்கும்.