முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
103

New Page 1

செய்தவர்கள், அவர்களைப் பிரிந்து நோவுபடாமல் அவர்களோடே கலந்து பரிமாறுவாய். ‘ஆனால் அதற்கு என்? அவர்களைப் பெறுகைக்கு ஒரு விரகு பெறுந்தனையும் நான் இங்ஙனே சிறிது போது இருந்து போகிறேன்’ என்றான். உனக்கு இங்ஙன் விரகு பெற்றுப் போக வேண்டுமோ? நீ 1கைகண்டதைப் பிரயோகம் செய்வாய். ‘அது யாது?’ என்றான். செவி ஓசை வைத்து எழக் குழல் ஊது - 2“எங்களுக்கே ஒருநாள் வந்து ஊத உன் குழல் இன்னிசை போதராதே” என்று இருக்குமவர்கள், நீ குழல் ஊதினால் சென்று செவிப்படும், உடனே வருவர்கள்காண். 3சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே, நீ குழல் ஊதவே பெண்கள் அடங்கலும் உன்காற்கீழே வந்து விழுவார்கள் காண். 4‘குழல் ஓசை கேட்பது எப்போது?’ என்று செவிகொடுத்துக்கொடுகாண் அவர்கள் இருப்பது. உன்னைப் பிரிந்தார் எல்லாக் கரணங்களையும் உன்மேலே வைத்திருப்பர்காண். 5“தூவலம்புரியுடைய திருமால் தூய வாயில் குழலோசை வழியே, கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப உடலுள் அவிழ்ந்து எங்கும், காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனர்” என்கிறபடியே, நீ குழல்ஊதப் புக்கால் நிற்பார் உளரோ? உன்காற்கீழேவந்துவிழுவர்காண், அதனைச்செய்என்றார்கள்.

 

1. கைகண்டது - அநுபவமானது என்றும், கையிலே இருந்த குழல் என்றும்
  சிலேடை.

2. நான் குழல் ஊதினால், வேறு ஒன்றிலே நோக்குள்ளவர்களுக்கு அது
  செவிப்படுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்கள்
  ‘எங்களுக்கே’ என்று தொடங்கி. என்றது, நீ சர்வ சாதாரணனான பின்பு,
  உன் குழலும் சர்வ சாதாரணமாயிருக்க, ஒரோ இடங்களில் ஒருநாள்
  நாங்கள் கேட்க வந்து ஊதவேண்டும் என்றால், நீ ஊதினாலும் இசை
  புறப்படாதபடி யாயிற்று குழலின் தன்மை இருப்பது என்றபடி.

3. அதனை விவரணம் செய்கிறார் ‘சர்ப்பயாகத்தில்’ என்று தொடங்கி.
  சர்ப்பயாகம் செய்தவன் - ஜநமேஜயன்.

4. ‘எங்களுக்கே ஒருநாள்’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘குழல் ஓசை’ என்று தொடங்கி.
  அதற்குக் காரணம், உன் விஷயத்தில் அவர்களுக்கு உண்டான
  பிராவண்யம் என்கிறார்கள் ‘உன்னைப் பிரிந்தார்’ என்று தொடங்கி.

5. குழல் ஓசையில் ஈடுபட்டு அவர்கள் வருவதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘தூவலம்புரி’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 1.