New Page 1
துடியாமைக்கு ஒரு விரகு
சொன்னோமாகில் அதனை இங்கே கொள்ளப் பார்த்தாயோ?’ குழல் ஊது போய் இருந்தே-உனக்குப் பெண்கள்
படும் வாய்ப்புள்ள இடத்தே போய் இருந்து ஊதப் பாராய்.
1தோகை
மா மயிலார்கள் - இவன் ஓதி உணர்ந்தவன் ஆகையாலே கொண்டாடத் தொடங்கினான். ‘இவன் ஓதி
உணராமல் அன்றோ நம் குழலை இப்படிக் கொண்டாடுகிறது’ என்று, ‘இதுமயங்கினவன் வார்த்தை’ என்று
அவர்கள் வேறுபடுத்துகிறார்கள். 2தலையான பேச்சினை அன்றோ இவர்கள் வேறு படுத்துகிறது.
செவி ஓசை வைத்து எழ - குழல்ஓசையைச் செவியாலே வைத்துக்கொண்டு வர. ஆகள் போக விட்டுக் குழல்
ஊது - பசுக்களைப் போகவிட்டுக் குழல் ஊது. 3ஊதவே, உன்நினைவும் முடிந்து பசுக்களின்
வயிறும் நிறையும். ‘செவி ஓசை வைத்து எழுகை பலமாய், குழல் ஊதுகை உபாயமாய் இருந்தது; அதுதான்
அபிமதவிஷயத்தைப் பற்றி யன்றோ செய்வது; இங்கே இருந்து ஊதுகிறேன்’ என்று குழலைவாங்கி ஊதினான்.
போய் இருந்தே குழல் ஊது - ஒன்றைச் சொல்ல, ஒன்றைச் செய்யாதே; உனக்கு விருப்பமுள்ளவர்கள்
திரளுகைக்கு நீர்வாய்ப்புள்ள நிலங்களிலே போயிருந்து ஊதாய்.
(2)
566.
போயிருந்து நின் புள்ளுவம்
அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின்செய்ய
வாயிருங் கனியும் கண்களும்
விபரீதம் இந்நாள்;
வேயிருந் தடந்தோளினார்
இத் திருவருள்பெறுவார் எவர்கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த
பெருமானாலே?
பொ-ரை :-
எல்லாம்
நிறைந்தவனே! போயிருந்து, உனது களவுகளை அறியாதவர்களுக்குச் சொல்லுவாய்; பெரிய கோவைக்கனி
போன்ற
1. ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்தருள,
அவருக்காக மீண்டும் அப்பதங்களை
எடுத்துப் பொருள் அருளிச்செய்கிறார் “தோகைமாமயிலார்கள்”
என்று
தொடங்கி. ‘ஓதி உணர்ந்தவன்’ என்பதற்கு, மயிரின் அழகினை அறிந்தவன்
என்றும், அத்யயனம்
செய்த ஞானவான் என்றும் பொருள். ‘ஓதி
உணராமல்’ என்பதற்கு, எங்கள் கூந்தலின் தன்மையை அறியாமல்
என்றும், படித்து அறியாமல் என்றும் பொருள்.
2. ‘தலையான’ என்பதற்கு,
மேன்மையான என்றும், தலைவிஷயமான என்றும்
பொருள்.
3. குழல் ஊதினால்,
பசுக்கள் மேய்தலைவிட்டு வருமே, வந்தால் அவை
பட்டினியாக இருக்கவேண்டிவருமே? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்கள் ‘ஊதவே’ என்று தொடங்கி.
|