முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
109

படியான தோள் அழகு படைப்பதே! 1தன்தோள் அழகு கண்டு பெண்பிறந்தார் அடங்கலும் படும் பாட்டை யடங்கலும் இவனைப் படுத்தும்படியான தோள் அழகுடையார் உண்டாவதே! 2பெரியவன் கையிலே பெரியது பட்ட பாடு அடங்கலும் தங்கள் கையிலே இவன் படும்படி செய்ய வல்லர் ஆவதே! “வைகுந்தனுடைய தோள்களால் சுழலப்பட்ட மந்தரத்தின் ஒலி வீழ்ச்சி” என்று கொண்டு அது ஊமைக் கூறனாகப் பட்டவெல்லாம் படுகைஅன்றோ. 3அன்றிக்கே, மந்தரத்தை நட்டுக் கடலை நெருக்கிக் கடைந்து பெரிய பிராட்டியாரைப் பெற்ற அன்றும் இந்த வேறுபாடு கண்டோம் இல்லையே! பழையாரைப் பெற்றாற்போல் அன்றே புதியாரைப் பெற்றால் இருக்கும்படி.

(3)

567.

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன்மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம்பரமே?
வேலி னேர்தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.

   
பொ-ரை :- பிரளயகாலத்தில் ஏழ் உலகங்களையும் உண்டு, முகிழ் விரிந்து நீளுமளவான ஆல்இலையிலே நீ சயனித்திருந்தாய்; உன்னுடைய ஆச்சரியமான செயல்களை நித்தியசூரிகளும் அறியமாட்டார்கள்; இனி எங்களால் சொல்லக் கூடியதாமோ? வேலை ஒத்த விசாலமான கண்களையுடைய பெண்கள் விளையாடுகின்ற இடங்களைச் சூழ்ந்து நின்றுகொண்டு பசுக்களை மேய்க்க வல்லவனே! எங்களை நீ மேலிட்டு வார்த்தை சொல்லாதே.

 

1. “சுந்தரத்தோளுடையான்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘தன்தோள் அழகு’ என்று தொடங்கி.

2. “பெருமான்”, “மாயிருங்கடல்” என்பனவற்றைக் கடாக்ஷித்து இரண்டாவது
  கருத்து அருளிச்செய்கிறார் ‘பெரியவன்’ என்று தொடங்கி. ‘கையிலே
  இவன் படும்படி’ என்றது, தோளழகிலே இவன் ஈடுபடும்படி என்றபடி.
  விவரணம் செய்கிறார் ‘வைகுந்தனுடைய’ என்று தொடங்கி.

3. “நின் செய்ய வாய் இருங் கண்ணும்” என்றதனைக் கடாக்ஷித்து மூன்றாவது
  கருத்தினை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. பெரிய
  பிராட்டியாரை அடைந்ததைக் காட்டிலும், இவர்களைப் பெற்றதற்கு ஏற்றம்
  யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பழையாரை’ என்று
  தொடங்கி.