முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
11

அழைக்கவேண்டுகிறதன்றோ அவனை. 1ஒருகலத்திலே ஒக்க உண்டு ஒருபடுக்கையிலே கிடந்து தூது போவாரைப்போலே காணும் இவற்றின்படி.

    மேயும்-2“வீட்டில் கூசுதல் இன்றி உணவு உண்ணப்பட்டது” என்னும்படி இருக்கை. குருகு இனங்காள்-“மனைவிகள் காண்பிக்கப் பட்டார்கள்.” என்கிறபடியே, இது ஒரு சேர்த்தி இருந்தபடி என். வந்து மேயும் இனங்காள்-3நிருபாதிக பாந்தவமுடையார்பக்கலிலே மனைவி மக்களோடே சென்று ‘சோறுஇடும்’ என்று உண்பாரைப் போலேகாணும் இவற்றின்படி. குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர் என்று கூட்டுக. பண்டை முதலிகள், ‘பத்தாம் பாசுரத்திலே, பிரணயரோஷம் தோற்றச் சொல்லுகிறாள்’ என்று நிர்வஹிப்பர்கள். 4‘பாசுரந்தோறும், கிலாம்தோற்றச் சொல்லுகிறாள்’ என்று பட்டர் அருளிச்செய்யும்படி. வந்து மேயும் குருகினங்காள்! கைகள் கூப்பிச் சொல்லீர்-5என்றும் பிறர்க்கு உதவிசெய்யவே தேடித்திரியுமித்தினையோ, உங்கள் காரியமும் செய்யவேண்டாவோ!

 

1. “மேயும்” என்றதனைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒரு
  கலத்திலே’ என்று தொடங்கி. என்றது, அருச்சுனனும் கிருஷ்ணனும் ஒரு
  கலத்திலே உண்டும், ஒரு படுக்கையிலே படுத்தும், பின், கிருஷ்ணன்
  தூதுபோனாற் போலே என்றபடி.

2. கதிதாநி ரஹஸ்யாநி க்ருஹேபுக்தம் அசங்கிதம்
  தர்சிதாநி களத்ராணி ஸௌஹார்தம் கிமத: பரம்”

  என்பது, பாரதம் உத்யோகபர். இது, கிருஷ்ணனைப் பார்த்துக் கர்ணன்
  கூறியது.

3. “வந்து மேயும் குருகு இனங்காள்” என்ற பதச் சேர்த்திக்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘நிருபாதிக பாந்தவம்’ என்று தொடங்கி. நிருபாதிகம்
  - காரணம்பற்றாமல் வருதல். பாந்தவமுடையார் - தரும புத்திராதிகள்.
  பாந்தவம் - உறவு. ‘உண்பாரைப் போலே’ என்றது, உண்ட கிருஷ்ணனைப்
  போலே என்றபடி.

4. பட்டர் நிர்வாகத்துக்குக் காரணம், “உணர்த்தல் ஊடல் உணர்ந்து”
  (பா. 5.) என்ற பிரணய ரோஷத்தைக் கூறுகிற பாசுரம். கிலாம் -
  பிரணயரோஷம்.

5. “வந்து மேயும் குருகினங்காள், கைகள் கூப்பிச் சொல்லீர்” என்கிறவளுடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்றும் பிறர்க்கு’ என்று தொடங்கி.
  பிறர்க்கு உதவி செய்தலாவது, வந்து மேய்தல். ‘பிறர்க்கு’ என்றது, தனக்கு
  என்றபடி. ‘உங்கள் காரியம்’ என்றது, தூதுசென்று இருவரையும் சேர்ப்பித்தல்.