1
1“சூட்டு
நான்மாலைகள் தூயன ஏந்தி” என்றுகொண்டு அவர்கள் சமாராதனத்துக்கு வேண்டுவன கொண்டு நிற்க, ஈட்டிய
வெண்ணெய் தொடு உண்ணப் போந்தான் அன்றோ. அதுதன்னையும் விட்டு அன்றோ அடல் ஆயர்தம்
கொம்பினுக்குக் கோட்டிடை ஆடினான். 2பழையாரை எல்லாம் காற்கடைக் கொள்ளுகிற
இடமாய் இருக்கிறதன்றோ. நவப்பிரியைகளை விரும்புவாரைப் போலே காணும்.
இனி எம் பரமே - 3நித்தியசூரிகளோடு ஒக்கத் தங்களையும் ஒன்றுபடுத்திப்
பேசுகிறார்கள். அவர்களுக்கு நிலம் அல்லாதது எங்களால் அளவிடப் போமோ? 4அவை யெல்லாவற்றையும்
எங்களை ஒழியச் சொல்லாய். ‘என்தான்’ நான் பசுமேய்த்தமை இல்லை என்கிறீர்கோளோ? அறிந்திலோம்
என்கிறீர்கோளோ? நான் சொன்னது பொய்தான் என்கிறீர்கோளோ? என்றான். அவையெல்லாம் அப்படியே
யானாலும் நீதான் பசுக்கள் மேய்க்கும்படி இப்படியேயோ? வேலின் நேர் தடங் கண்ணினார்
விளையாடு சூழலைச் சூழவே நின்று காலி மேய்க்க வல்லாய் - அநுபவிக்கின்றவர்களுடைய அளவு அல்லாதபடி
பரப்பையுடைத்தாய், ஓர் ஆளும் ஒரு நோக்கும் நேரான கண்களையுடையராயிருக்கிற பெண்களினுடைய கண்களிலே
துவக்குப்பட்டு அவ்வருகு போகமாட்டாதே நின்றுபோலே காணும் பசுக்களை மேய்ப்பது! 5என்றது,
“கார்த்தண் கமலக் கண்என்னும் நெடுங்கயிறு
1. நித்தியசூரிகளைக்
காற்கடைக் கொண்டானோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் “சூட்டுநன்மாலைகள்” என்று தொடங்கி.
இது, திருவிருத்.
செய். 21.
2. ‘உகந்தாரைக் காற்கடைக் கொள்ளுதலைச் சொல்லும் இடமாகையாலே’
என்று மேலே கூறிய வாக்கியத்தை
விவரணம் செய்கிறார் ‘பழையாரை’
என்று தொடங்கி. ‘பழையார்’ என்றது, இங்கே, ஊடுகிறவர்களை.
‘புதியார்’
என்றது, அவன் மின்னிடை மடவாரை. நவப் பிரியைகள் -
விருப்பத்திற்கிடமான புதியர்கள்.
3. ‘நித்தியசூரிகளோடு ஒக்க’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
நித்தியசூரிகளை
வஞ்சித்தாற்போலே எங்களையும் வஞ்சித்தாய் என்பது.
அறியாமையில் ஒப்புமையை நோக்கி ஒன்றுபடுத்துகிறார்கள்
என்க.
4. ‘அவை எல்லாவற்றையும்’ என்றது, மாயங்கள் எல்லாவற்றையும் என்றபடி.
என்றது, ‘நான் தாய்
தந்தையர்கட்குப் பரதந்திரப் பட்டவன்’ என்றது
முதலாக மேலே கூறிய வார்த்தைகளை.
5. “வேலின் நேர் தடங்கண்ணினார்” என்றவர்களுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார்
‘என்றது’ என்று தொடங்கி. ‘கார்த்தண் கமலம்’ என்ற
திருப்பாசுரம், நாய்ச்சியார் திரு. 14
: 4.
|