கழ
கழறேலே - 1விசாய்ந்து வார்த்தை சொல்லாதேகொள். என்றது, நீ இங்ஙன் மேலிட்டு
வார்த்தை சொல்லப்பெறாய் காண் என்கிறார்கள் என்றபடி. 2நீயும் நாங்களுமானால்
எங்களை நீ அடர்த்து வார்த்தை சொல்ல என்ன சம்பந்தம் உண்டு? சேதநரைப் போலே வந்து வார்த்தை
சொல்லுவதே! அதிலே வைத்து மிகைத்து வார்த்தை சொல்லுவதே! ஆற்றாமைக்கு உதவினார்க்கு அன்றோ
வாய் உள்ளது!
(4)
568.
கழறேல்
நம்பி! உன் கைதவம் மண்ணும் விண்ணும்
[நன்கறியும்; திண்சக்கர
நிழறுதொல்படையாய்!
உனக்குஒன்றுஉணர்த்துவன்நான்;
மழறு தேன்மொழியார்கள்
நின்னருள் சூடுவார்மனம் வாடிநிற்க, எம்
குழறு
பூவையொடும் கிளியோடும் குழகேலே.
பொ-ரை :-
நம்பீ! மேலிட்டு வார்த்தை சொல்லாதே; உனது வஞ்சனையை மண்ணுலகமும் விண்ணுலகமும் நன்றாகத் தெரிந்துகொண்டிருக்கிறது.
திண்மை பொருந்திய பிரகாசத்தையுடைய இயல்பிலே அமைந்த சக்கரப் படையையுடையவனே! நான் உனக்கு
ஒன்று உணர்த்துகின்றேன்; இளந்தேன் போன்ற சொற்களைப் பேசுகின்றவர்களாய் நின்னருளைப் பெற்றவர்களான
பெண்கள் மனம் வாடி நிற்க, நீ இங்கே நின்றுகொண்டு, எங்களுடைய குழறுகின்ற பூவையோடும்
கிளியோடும் சேர்ந்து விளையாடாதே என்கிறாள்.
வி-கு
:-
நின்னருள் சூடுவாராகிய மழறு தேன்மொழியார்கள் என்க. மழறுதல் - மென்மையவாதல். குழறுதல் - தெளிவில்லாமல்
பேசுதல். நிழறுதல் - ஒளிவிடுதல்.
1. விசாய்ந்து - மேலிட்டு.
மேலிட்டு வார்த்தை சொல்லலாகாதோ? என்ன,
குற்றத்தையுடைய உனக்கு அதற்குத் தகுதி இல்லைகாண்
என்கிறார்கள்
‘என்றது’ என்று தொடங்கி.
2. “எம்மை நீ” என்ற சொற்களையும் கூட்டிக்கொண்டு, மேலே கூறியதனை
விவரணம் செய்கிறார்
‘நீயும் நாங்களும்’ என்று தொடங்கி. ‘நீயும்
நாங்களும்’ என்றது, குற்றத்தையுடைய நீயும், துக்கத்தை
அநுபவிக்கின்ற
நாங்களும் என்றபடி. ‘சேதநரைப்போலே’ என்றது,
அறிவுடையவர்களைப்போலே எங்களை
எண்ணி என்றபடி.
|