முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
121

யாலே “மனம் நிலை பெற்றது, சந்தேகங்களும் நீங்கின” என்னும்படி வார்த்தை சொல்ல வல்ல உன்னை ஒருவார்த்தையாலே கலங்கப் பண்ணுமவர்கள் என்றபடி. ‘அதற்கு என்?’ என்றான். அவர்கள் 1எங்களைப்போல் அல்லர்காண். நீ பிரயோஜனம் இல்லாமல் இங்கே நிற்கச் செய்தேயும், இதனை அறிந்துவைத்தும் கணநேரமும் பிரிவு பொறுக்கமாட்டாமையாலே அவர்கள் மனங்கள் வாடுங்காண். 2கொம்பை இழந்த தளிர்போலேகாண் அவர்கள் நெஞ்சுகள் வாடும்படி. ‘கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்’ என்று இருக்குமவர்கள் அலரோ அவர்கள். அவ்வளவில் நீ உதவப் பெறாமையாலே போர நோவுபடுவர்கள்; அதுகண்டால், நீ பொறுக்க வல்லையோ என்று சொல்லிப் பேசாதே இருந்தார்கள்.

    ‘உங்கள் பேச்சைக் காட்டிலும் எனக்குத் தாரகம் இவற்றின் பேச்சுக்கள் அன்றோ!’ என்று, அவர்களை விட்டுப் பூவையையும் கிளியையும் கொண்டாடப் புக்கான்; 3சிலரை ஆதரிக்கையாவது, அவர்கள் உடைமையை ஆதரிக்கை அன்றோ. அவற்றை ஆதரித்து வார்த்தைகொள்ளப்புக்கவாறே, 4வாராய்! அவைதாம் யார் உடைமைகள் என்றிருக்கின்றாய்? அவை நீ நினைக்கிறவர்களுடைய உடைமைகள் அல்லகாண்! எம் குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே - 5அவை உனக்கு வார்த்தை சொல்லுகிறன அல்லகாண்!

 

1. ‘எங்களைப்போல் அல்லர்காண்’ என்றது, பலநாள் பிரிந்து நோவுபட்டு,
  ஜீவிக்கவும் மாட்டாதே முடியவும் மாட்டாதே தரித்திருக்கிற
  எங்களைப்போல் அல்லர்காண் என்றபடி. இதனை விவரணம் செய்கிறார்
  ‘நீ பிரயோஜனம்’ என்று தொடங்கி.

2. “வாடிநிற்க” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘கொம்பை இழந்த’
  என்று தொடங்கி. பிரிவு பொறுக்காமல் அங்ஙனம் வாடுகைக்குக் காரணம்
  யாது? என்ன, ‘கொங்கை’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். இது, நாய்ச்சியார் திரு. 8 : 7.

3. இவர்களை விட்டுப் பூவை கிளிகளை ஆதரிப்பதற்குக் காரணத்தை
  அருளிச்செய்கிறார் ‘சிலரை ஆதரிக்கையாவது’ என்று தொடங்கி. 

4. “எம்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் “வாராய்” என்று தொடங்கி.

5. “குழறுபூவை” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அவை உனக்கு’
  என்று தொடங்கி.