முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
122

அவற

அவற்றிற்கு அது இயல்புகாண். குழகேலே-1நாங்கள் வேறாகவார்த்தை சொல்லச்செய்தேயும் கண்டாயே, நீ வேறு கதி இல்லாமை தோற்ற வார்த்தை சொல்லுகிறபடி. அப்படியே அவற்றின் பேச்சும் வேறு பொருள்காண். குழறுதல் - எழுத்துக்கள் தோன்றாதவாறு பேசுதல். குழகுதல் - லீலாரசம் கொண்டாடுகை.

(5)

569.

    குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து
                                [கன்மம் ஒன்றில்லை;
    பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
    அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
    கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.

    பொ-ரை :-
வசீகரித்தற்குரிய செயலைச் செய்து எங்களுடைய குழமணனை எடுத்துக்கொண்டு மேன்மை தோன்றப் பேசுவதனால் ஒரு பயனும் இல்லை; நாங்கள் முன்னரே இவற்றில் பழகி இருக்கின்றோம்; நீ செய்கின்ற இந்தத் திருவருள்கள் எங்கள் அளவேயோ! இந்த மூன்று உலகங்கட்கும் உம்மோடு ஒக்க முடிசூடத் தக்கவர்களாகிய அழகினையுடையவர்கள் பலர் உளர்; நம்பீ! எங்கள் கூட்டத்தில் ஏறாதே; உனக்கும் இது இளைமைப் பருவத்திற்கு உரிய செயலேயாம்.

   
வி-கு :- இவ்வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் அழகியார் பலர் உளர் என்க. குழகுதல்-வசீகரித்தலுக்குரிய செயலைச் செய்தல். குழமணன்-மரப்பாவை. கோயின்மை - பெருமை. அல்லது, செருக்கு. கழகம் - கூட்டம். இளைது - இளமைப் பருவத்திற்குரியது.

   
ஈடு :- ஆறாம்பாட்டு. 2தங்கள் மனங்களிலே ஓடுகின்றவற்றைத் தெரியாமல் மறைத்துக்கொண்டு அணுக முடியாதவர்களாயிருக்கிற இந்தப்பிராட்டியையும் தோழிமாரையும் கண்டு, அவன் தன் முகமுத்திரைகளாலும், கருத்துடைய வார்த்தைகளாலும், அதனைத் தொடர்ந்து வருகின்ற இன்பச்செயல்களாலுமாக இவர்கள் எண்ணங்களைக் குலைத்து, இனி இவர்கள், தான் செய்தவை எல்லாம்

 

1. இயல்பு ஆன படியைக் காட்டுகிறார் ‘நாங்கள்’ என்று தொடங்கி. வேறாக
  - உறவு அற.

2. “குழகி எங்கள் குழமணன் கொண்டு” என்பதிலே நோக்காக அவதாரிகை
  அருளிச்செய்கிறார். “குழகி” என்றதற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘அவன்
  தன் முகமுத்திரைகளாலும்’ என்று தொடங்கி. அதனை - அந்த
  மனக்கருத்தை, வாய்மாளப்பண்ணி - ஈடுபடுத்தி.