New Page 1
தோற்றச்
சில செயல்களைச் செய்ய, இத் திரு அருள்கள் 1எம்பரமே-நீ எங்கள் அளவல்லாத
ஆசையை வைத்து, குளப் படியிலே கடலை மடுத்தாற் போலே நீ செய்கிறவை எல்லாம் எங்களால் பொறுக்கப்
போமோ? நீ செய்கிறவை எல்லாம் பொறுக்கவல்லார் வேறே சிலவர்கள் என்கிறார்கள்.
‘அவர்கள் யார்?’ என்றான்.
2அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்-“மூன்று உலகங்களையும், அவற்றோடே உலகம் என்ற
சொல்லுக்குப் பொருளாகவுள்ள சர்வேசுவரனையும் கூட ஒருதட்டு ஆக்கினால், பிராட்டியினுடைய ஒருகலா
மாத்திரத்திற்கு எடை நிற்கமாட்டாது” என்று கூறும்படியுள்ளவர்கள். 3‘அவர்கள் எங்ஙனே
இருப்பர்கள்?’ என்றான். தேவிமைதகுவார் - உனக்குப்பட்டங் கட்டப் போரும்படியாயிருப்பார் என்ன,
4ஆனால், எனக்கு உபேக்ஷிப்பதற்கும் சிலர் வேணுமே? என்றான். பலர் உளர் - உனக்குப்
பொகடுகைக்கும் விஷயம் அங்கே உண்டு என்கிறார்கள். 5ஒருத்தனுக்கு ஒன்று சுபாவம்
ஆனால், அது வேறு ஓர் இடத்தில் போனஅளவில் குலையாதே அன்றோ; அப்படியே அங்குள்ளாரையும் பொகடுகை
இவனுக்கு இயல்பு என்னுமிடம் தோற்றச் சொல்லுகிறார்கள். 6ஓர் அடிப்பாடர் அல்லீரே
நீர்;
1. பாசுரத்தில் இல்லாத
“எம்” என்ற சொல்லைக் கொணர்ந்து கூட்டி
“எம்பரமே” என்கிறார்.
2. “அழகியார் இவ்வுலகு மூன்றுக்கும்” என்பதற்கு, மூன்று உலகங்களும்
விலையாகப் போரும்படியான
அழகியார் என்பது பொருள். அதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் “மூன்று உலகங்களையும்” என்று தொடங்கி.
“ராஜ்யம் வா த்ரிஷு லோகேஷு ஸீதா வா ஜநகாத்மஜா
த்ரைலோக்யராஜ்யம்
ஸகலம் ஸீதாயா நாப்நுயாத்கலாம்”
என்பது,
ஸ்ரீராமா. சுந். 16 : 14. ‘கலாமாத்திரத்திற்கு’ என்றது, அழகிலே
கலாமாத்திரத்திற்கு என்றபடி.
3. ‘அவர்கள் எங்ஙனே இருப்பர்கள்?’ என்றது, அவர்கள் நம்முடைய
விருப்பத்திற்கு விஷயமாக
இருப்பார்களோ? விருப்பமின்மைக்கு விஷயமாக
இருப்பார்களோ? என்றபடி.
4. ‘ஆனால்’ என்றது, அவர்கள் என்னுடைய காதலுக்கு உரியவர்களானால்
என்றபடி.
5. இவர்களை விரும்பாமல் இருக்கலாமே ஒழிய, அங்கேயுள்ள அவர்களையும்
விரும்பாமல் இருப்பானோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஒருத்தனுக்கு’ என்று தொடங்கி.
6. “பலர்” என்றதனால் போதரும் பொருளை அருளிச்செய்கிறார் ‘ஓர்
அடிப்பாடர்’ என்று தொடங்கி.
என்றது, விருப்பமின்மைக்கு உரியவர்களும்
உளர் என்றபடி.
|